ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகமணி பரமலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகமணி பரமலிங்கம்

வயது 7627 ஆகஸ்ட், 1942 – 14 ஜூன், 2019

பிறந்த இடம்
கந்தரோடை
வாழ்ந்த இடம்
கந்தரோடை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமணி பரமலிங்கம் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசாரி மார்க்கண்டு, சாரதம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுநாதன்(சுவிஸ்), ரவீந்திரன்(லண்டன்), ரஜந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யமுனா(சுவிஸ்), இமுதா(லண்டன்), கவியரசி(கம்சா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, கற்கண்டு சிவக்கொழுந்தார், தர்மலிங்கம், குலசிங்கம் மற்றும் தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஷ்வரி, பரமேஷ்வரி, சற்குணதேவி, சிவராசா மற்றும் வள்ளியம்மை, தவமணிதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், தெய்வநாயகி, புஷ்பநாயகி மற்றும் குலசிங்கம், யோகநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாருஜன், டிரன்(சுவிஸ்), டெல்பினா, திலக்‌ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததும் பண்டைய பாரம்பரிய அரசதானி எச்சங்கள் அமைந்துள்ள கந்தரோடையில் புகழ் பூத்த சீமான் திரு.நாகமணி அவர்தம் பாரியார் திருமதி நாகம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 27/AUG/1942 ஆம் ஆண்டில் திரு.பரமலிங்கம் அவர்கள் இவ் அழகிய பூமியில் நடராசா, கற்கண்டு சிவக்கொழுந்தார், தர்மலிங்கம், குலதுங்கம், தவமணிதேவி போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சேர்ந்து தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.திருமதி ஆசாரி மார்க்கண்டு சாரதம்பாள் தம்பதிகளின் அன்பு மகளான செல்வநாயகி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக ரகுநாதன், ரவீந்திரன், ரஜந்தன் போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்களின் விருப்பத்தின் காரணமாக யமுனா, இமுதா, கவியரசி என்பவரைத் திருமணம் முடித்து வைத்து சாருஜன், டிரன், டெல்பினா, திலக்‌ஷன் போன்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் கிளி என அன்பாக அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும், பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 14.06.2019 இல் 76 வயதில் கந்தரோடையில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அன்பு அப்பா
......அழகிய உருவே
அன்பு மனமே
......அறிவு உள்ளமே
உங்கள் மனமோ
.....வாசனை மலர்
பிரிந்து சென்று
.....வேதனை தந்தீரே"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.