ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகம்மா இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகம்மா இராசையா

வயது 8926 ஜூலை, 1930 – 27 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா இராசையா அவர்கள் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு துணைவியும்,

கந்தசாமி(கனடா), விமலாம்பிகை, ஞானாம்பிகை, சிவபாலன்(சிவா), சண்முகராசா(ஐக்கிய அமெரிக்கா), கமலாம்பிகை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பவளம்மா, ஞானசுந்தரம், பாலச்சந்திரன், நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயலஷ்சுமி, மகாலிங்கசிவம், விஜயகுமார், ஜெயகெளரி, தீபா, காலஞ்சென்ற வைரமுத்து ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திலீபன், குருபரன், வசீகரன், கம்ஷா, தன்ஷா, அருண், அரவிந்தன், அபி, லக்சன், நிரோசன், நிவேதா, அஸ்வின், அனுசன், ராஜ்மோகன், குமுதா, ஜெகன்மோகன், காலஞ்சென்ற தயாமோகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்சேய், ஜேயன், றம்மியன், ரேய்னா, அபிதா, கேயனா, லோசிகா, தனுஸ்கா, சனிஷா, யஸ்வினி, மதுசாலினி, கோபிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில் மேற்கில் 26/JUL/1930 இல் திரு.திருமதி சுப்பையா இராசம்மா தம்பதிகளின் அருமை மகளாய் நாகம்மா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பவளம்மா, ஞானசுந்தரம், பாலச்சந்திரன், நவரத்தினம் போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் அருமை மகனான இராசையா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக கந்தசாமி, விமலாம்பிகை, ஞானாம்பிகை, சிவபாலன், சண்முகராசா, கமலாம்பிகை போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஜெயலஷ்சுமி, மகாலிங்கசிவம், விஜயகுமார், ஜெயகௌரி, தீபா, வைரமுத்து போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 27.08.2019 இல் 89 வயதில் கனடாவில் உள்ள Bramptom நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

கொக்குவில் மண்ணின்
குல விளக்கே
எக் காலத்திலும்
அன்பாக பேசிடும்
எங்கள் உறவே
தங்க உறவே
விழிகளில் நீர் வடிய
விடிகிறது ஒவ்வொரு பகலும்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.