ஆறுதல்

நன்றி நவிலல்

நாகமுத்து கேதாரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகமுத்து கேதாரம்

ஆசாரியார்

வயது 7518 ஏப்ரல், 1945 – 21 டிசம்பர், 2020

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

குறள்-30
(அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை)

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரடி இல. 40 ஆசீர்வாதப்பர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து கேதாரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அப்பா!
வெள்ளை வேட்டி நெற்றி திருநீறு
கள்ளமற்ற பேச்சு ஆழ்ந்த மென் பார்வை
வெடுக்கென யார்க்கும் வேட்டுவைக்கா மென்குரல்
கடுகளவு பெறினும் காணும் என்னும் மனம்
விடுகதை ஆனால் விடையற்ற வாழ்க்கை
மிதித்த இடமெல்லாம் நற்செயலால் நல்கி
பிள்ளைகளை நன்கு கற்கவைத்த ஆசான்
பிறவிக்கடன் தீர்த்தே அமைதியாகி சென்றீர்
சொல்ல பலது உண்டு சோகம் மிகவே உண்டு
மீண்டும் எமக்குள் பிறந்து தந்தையாக வேண்டும்
அப்பா அப்பா அப்பா அடுக்காய் அழைக்க ஆசை

எமது தந்தையின் இறப்பு செய்தி கேட்டு நேரில் வருகை தந்தும், தொலைபேசியிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் துயர் பகின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதுடன் எமது தந்தையின் இறுதி நிகழ்வின் போது சகல வழிகளிலும் இறுதிவரை உதவி புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிருந்திய நிகழ்வு எதிர்வரும் 20-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத் தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும்,அதனை தொடர்ந்து இடம்பெறும் மதிய போசண நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 21 டிசம்பர், 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.