மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகநாதர் சிவசுப்பிரமணியம்
வயது 879 ஜூலை, 1928 – 19 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதர் சிவசுப்பிரமணியம் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபாலன்(சுவிஸ்), ஜெயபாலன்(ஆசிரியர்- யாழ் இந்துக்கல்லூரி), சிறிபாலன்(கண்ணன்- ஜெர்மனி), உமாபாலன்(கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்- உடுவில்), கலையரசி(பிரான்ஸ்), மதிபாலன்(ஆசிரியர்- மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை), அன்பரசி(ஆசிரியை- சி.சி.த.க பாடசாலை, கொக்குவில்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, அன்னப்பிள்ளை, லெட்சுமியம்மா, அப்பாத்துரை, மற்றும் முத்துலெட்சுமி, காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோகிலவாணி(சுவிஸ்), சுபேஷ்வரி(ஆசிரியை- ட்றிபேக் கல்லூரி, சாவகச்சேரி), சுஜிதா(ஜெர்மனி), கவிதா(கமநல சேவைகள் திணைக்களம்- உரும்பிராய்), மதியழகன்(பிரான்ஸ்), ஜெயந்தி, நல்லைக்குமரன்(பிரேதச செயலகம்- வேலணை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாதேவி, அருமைத்திருநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவானுஜன், பிரணவன், மதுமிதன், ஆருஷா, அபிநயா, அனோஜா, வைசாலினி, அக்ஷயன், அக்ஷயா, அபிஷயன், காருண்யா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

