மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகநாதி பத்மநாதன்
முன்னாள் உரிமையாளர்- சாரதா கூல்பார்- கிளிநொச்சி, சாரதா ஸ்ரோஸ்- சந்தையடி வட்டக்கச்சி
வயது 736 ஜூலை, 1944 – 6 மே, 2018
- பிறந்த இடம்
- சரவணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதி பத்மநாதன் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாம்பாள்(ஓய்வுபெற்ற நெசவு ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா(வைத்தியர்- கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை), லுரேந்திரன்(கணக்காளர்- பிரதேச செயலகம், கரைச்சி), கோகிலதாஸ்(விநாயகர் தளபாடம்- கிளிநொச்சி), பிரசாந்தி(வைத்தியர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, அன்னபூரணி மற்றும் பரமானந்தசிவம், காலஞ்சென்ற கருணாநந்தன், வரதராயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிஸ்ணலிங்கம்(வைத்தியர்- கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை), சுலேகா(முன்னாள் கணக்காளர்- சேவாலங்காமன்றம், வவுனியா), பிரதீபா, தினேஸ்குமார்(பொறியியலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், செளந்தரநாயகி மற்றும் சிவகாமசுந்தரி, சிவகுருநாதன், சாவித்திரிதேவி, சிவானந்தவல்லி, சகுந்தலாதேவி, சதாசிவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, பத்மநாதன், விமலா(நியூசிலாந்து), கமலாம்பிகை, சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உலகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, ராசேந்திரம் மற்றும் மகாலட்சுமி, காலஞ்சென்ற சிவராசலிங்கம், விக்னேஸ்வரலிங்கம், தவராசா, கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
பானுஜன், கபிஷஜன், தாருஜா, யனுஸ்கன், அஸ்மிதா, ஜித்விகா, கஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.245, சிவசுந்தரம் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

