ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

நாகராசா நாகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகராசா நாகேஸ்வரி

வயது 7926 ஜூலை, 1936 – 6 மே, 2016

பிறந்த இடம்
சங்கானை
வாழ்ந்த இடம்
நோர்வே, Bobigny

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதி தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராசா நாகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

காலத்தால் எமையீர்ந்து கருணை மழை தான் பொழிந்து
ஞானத்தில் எமைக்காத்து நற்பண்புதனையீர்ந்து

சாலச்சிறந்தோராய் சபையிலெமை மிளிரவைத்து
கோலமகள் குலவிளக்கு காலத்தால் மறைந்ததனால்

சீலத்தார் நினைவதனைச் சிந்தையிலே இருத்தி நாம்
ஓலத்தை விட்டவர்க்கோர் ஓங்குபுகழ் மலரெடுத்து

ஆலதுவாய் நின்றெம்மைக் காத்திட்ட அன்னைக்கு
மனதால் நினைந்தே நாம் சிந்துகின்றோம்
சமர்ப்பணம்!

பிரிவால் வாடும்
பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், மைத்துனர்கள்,
மைத்துனிகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்

எங்கள் அன்புத் தாயார் இறைபதம் எய்திய வேளையில் எமக்கு நேரிலும், தொலைபேசி மூலமும் ஆறுதல் அளித்த அனைவருக்கும், இறுதிநிகழ்வின் போது கலந்துகொண்டவர்களுக்கும், எமது குடும்பத் தலைவியின் துயரச்செய்தி கேட்டு ஓடோடி வந்து உதவிகள், ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், தொலைபேசி, இணையதளம் மூலமாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையம், பூ வைத்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்களுக்கும், உணவு, தண்ணீர் பரிமாறியவர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு பல வழிகளில் உதவியவர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிகிரியை 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Restaurant Paradise10, Avenue Louis Aragon - 93000 Bobigny(Bus 151 - Tram 1 - Arrêt: Escadrille Normandie Niemen) என்னும் முகவரியில் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை நடைபெறும், அழைக்க முடியாமல் போன அனைவரும் எங்களை மன்னித்து இவ் நிகழ்வில் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.