மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராசா இராமச்சந்திரா
கலைச்சுடர், சிரேஷ்ட ஊடகவியலாளர், JP
7 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- அல்வாய்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி, மண்டைதீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மண்டைதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கட்டப்பிராய் கலைமணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராமச்சந்திரா அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரத்தினராசா(முன்னாள் கிராம அதிகாரி- மண்டைதீவு) தில்லைநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிறிரங்கராணி(ஓய்வுபெற்ற அழகியல் உதவிக்கல்விப் பணிப்பாளர்- தீவக வலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிருந்தகுமாரி(ஆசிரியர்- சுவிஸ்), வினோதராஜ்(ஆசிரியர்-அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, சுசீலாதேவி, நாகேஸ்வரநாதன், யசோதரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலன்(சுவிஸ்), சாம்பவி(காப்புறுதி உத்தியோகத்தர்- எச்.என்.பி அஸ்சூரன்ஸ் மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிதம்பரராணி, காலஞ்சென்ற மதுரராணி, மங்களராணி, நவ. பாலகோபால்(ஓய்வுபெற்ற பிரதம முகாமைத்துவ உதவியாளர்), ஜெயகோபால்(பிரான்ஸ்), இராசகோபால்(கனடா), காலஞ்சென்ற முத்துராணி(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரங்கன், அர்ச்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
பிருந்தாவனம்,
கலைமணி வீதி,
கட்டப்பிராய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

