ஆறுதல்

நன்றி நவிலல்

நாகராசா சரஸ்வதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகராசா சரஸ்வதி

வயது 826 ஏப்ரல், 1937 – 19 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "

எமது அன்புத் தெய்வம் இறையடிஎய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள்,தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும்,இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும்,உற்றார்,உறவினர்க்கும்,நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய ஆனைக்கோட்டையில் 06/APR/1937 இல் திரு.திருமதி தளையசிங்கம் கண்மணி தம்பதிகளின் அருமை மகளாய் சரஸ்வதி அவர்கள் புவனேஸ்வரி,தங்கரத்தினம்,இராசகுலசிங்கம் எனும் உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி செல்லப்பா தங்கம் தம்பதிகளின் அன்பு மகன் திரு.நாகராசா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக பரமேஸ்வரன், றஞ்சினி, ரூசேந்திரன், தெய்வநாயகி, சாந்தினி, சறோஜினி, லோயினி, கிரிசாந்தினி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து இரத்தினசிங்கம், ஆனந்தி, றஞ்சினி, யோகநாதன், முத்துலிங்கம், ரவீந்திரன், சதானந்தன்,திருவருட்செல்வன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து பிரகாஷ்-மெலிஷா, பிரசாத், பிரதாப்-திவ்வியலக்ஸ்மி, சாறஞ்யா, சாமினி, கபிலன், றதீதன், நிக்ஷன், சாருசன், நவநீதநாதன், சுஜித்தன், அஜித்தன், நிருபன், மயூரன், அபிலாஷ், சௌந்தர்யா, விக்ரம், சுஜித்தா, சுகந்தன், சயந்தன், அபிராமி, ஆதிராஜ் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 19.08.2019 இல் 82 வயதில் பிரான்ஸில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

அழகு வதனமே அன்பு மலையே
பழச் சுவையே பேச்சுக் கலையே
நிழலாய் ஆடும் நம் சிலையே
பழமை நினைவில் ஏங்குகிறோம்
வழமைப் பேச்சின்றி தவிக்கிறோம்

பிற அறிவித்தல்கள்

  1. 20 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.