மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராசா சரஸ்வதி
வயது 7826 ஆகஸ்ட், 1940 – 11 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- நயினாதீவு, Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சரஸ்வதி அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா(நாகேசு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சங்கரலிங்கம், சிவபாக்கியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தில்லைநாயகி(தில்லைமணி- டென்மார்க்), ஜெயபுஷ்பராணி(ஜெயா- கனடா), பாலச்சந்திரன்(பிருந்தாவனம்- Mississauga), ஜெயச்சந்திரன்(கனடா), ரவிச்சந்திரன்(நோர்வே), கஜீந்திரன்(கஜீ- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரதிகாந்தன்(டென்மார்க்), தியாகராசா(கனடா), ரதிமாலா(கனடா), ஜெயந்தி(கனடா), காலஞ்சென்ற சத்தியவதனி(நோர்வே), ஜெயரூபி(நோர்வே), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தங்கம்மா, சரவணமுத்து, முத்தையா மற்றும், கமலாச்சி(நயினாதீவு) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வத்சலா- தமிழ்ச்செல்வன், விஜித்தா- ஸ்ரீதரன், ஜெனித்தா- சஞ்சீபர், சஞ்சீவன்- வினோஜினி, தனுஷியா- வினோத், சோபிதன், தரண்யா, பிருந்தா, பிரவீனா, லக்ஷனா, திவ்யா, சுருதியா, லக்ஷிகன், ரதுஷன், லிகாசன், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபினாஸ், அஸ்மிதா, அபர்னா, அப்சரா, சுவேத்தா, நவீனா, றேகன், நிவாஸ், நித்தீஸ், யாமிலன், யதுன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள அழகிய இடமும், மக்கள் செறிந்து வாழ்வதுடன், பல்கலைக்கழகம் அமைத்துள்ள படித்த மக்கள் நிறைந்து வாழும் இடமுமான திருநெல்வேலி தெற்கில் 26/Aug/1940 இல் தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அருமைப் மகளாய் சரஸ்வதி அவர்கள் சங்கரலிங்கம், சிவபாக்கியம் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் நயினாதீவு கணபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான நாகராசா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தில்லைநாயகி, ஜெயபுஷ்பராணி, பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன், கஜீந்திரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து ரதிகாந்தன், தியாகராசா, ரதிமாலா, ஜெயந்தி, சத்தியவதனி, ஜெயரூபி, கவிதா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 11.07.2019 இல் 78 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கருணை முகமே
அருமை மனமே
சிறுமைக் குணமற்ற
சிந்தை உள்ளமே
கடவுள் உருவின்
கடைசி உயிரே
படமானீர் மனதில்
பசுமை நினைவுடன்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

