ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகரத்தினம் நாகேந்திரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகரத்தினம் நாகேந்திரம்

வயது 746 ஜூலை, 1945 – 10 அக்டோபர், 2019

பிறந்த இடம்
கைதடி மேற்கு
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் நாகேந்திரம் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கோவிந்தர் ராசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாகேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

உதயமதி, தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீதரன், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தபனியா, ஹமிஷா, பிரதீஷா, கிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

பொன்னுத்துரை, மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், தனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீரஞ்சனதேவி, சண்முகரத்தினம், ரதிதேவி, ஜெயபாலசந்திரன், தேவராஜா- இராஜேஸ்வரி, புவனேஸ்வரி- பாண்டியர், பூமணிதேவி- முத்துராசா, மனேன்மணிதேவி- பாலராஜன், காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பூபாலரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகிந்தினி சுகந்தன், பகீரதி முரளிதரன், மயூரி, சுபவண்ணன், மயூரன் ஜெனனி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பிரசாந், பானுஜா, பானுஜன், பிரணவன் கமலலேஜினிதேவி, சேந்தன் வசந்தறோகினி, சிவகங்கா கிரிதரன், துர்க்கா சிவதாஸ், சாம்பவி தர்மேந்திரா, தேனுகன் திவ்வியா, தேனுஜா ஆகியோரின் அன்பு மாமியும்,

கஜானன், வைஷ்ணவி, சாய்ராம், டிவேஸ், கிருஸ்ணிதா, டமிதா, கோபணா, அக்‌ஷிதா, அஸ்விதா, கிரிசன், நிகர்ஷான், பிரணிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட கைதடி மேற்கில் 06/JUL/1945 ஆம் ஆண்டில் திரு.திருமதி வேலாயுதர் தங்கம்மா தம்பதிகளின் அழகுக் குழந்தையாக நாகரத்தினம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பொன்னுத்துரை, மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், கோபாலகிருஷ்ணன், தனேஸ்வரி போன்ற சகோதரங்களுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளாகியதும், திரு.திருமதி கோவிந்தர் ராசமுத்து தம்பதிகளின் அன்பு மகன் நாகேந்திரம் எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இருவரின் வாழ்க்கைப் பயணத்தில் வம்ச விருத்தியாக உதயமதி, தர்சினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து ஸ்ரீதரன், ஸ்ரீகாந்தன் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து தபனியா, ஹமிஷா, பிரதீஷா, கிருஸ்ணா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் சுவையான உணவுகள் செய்வதும், சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.

இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.10.2019 இல் 74 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.