ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகையா கோவிந்தர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகையா கோவிந்தர்

வயது 897 ஜூன், 1930 – 22 ஜூலை, 2019

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
சுருவில், கரம்பன், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் சுருவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோவிந்தர் நாகையா அவர்கள் 22-07-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தர், லட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கங்கா லஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

உலகநாதன், ஸ்ரீதரநாதன், கோகிலா, வரதீஸ்வரன், கேதீஸ்வரன், சசிகலா, நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகலா, இசைவாணி, ஸ்ரீஸ்கந்தராஜா, விஜி, அம்பிகைபாகன், றஞ்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், இராசம்மா(இலங்கை), கனகம்மா(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பூமணி ஆகியோரின் மூத்தச் சகோதரரும்,

நிமலன்- மதுரிகா, யாமினி- சஜீவ், டனா, டனீ, டானு, ராகுலன், றிஷான், ஓவியா, அருண், அகிலன், அருளினி, கவின், சுதன், பவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் குப்பிளானில் 07/Jun/1930 இல் திரு.திருமதி கோவிந்தர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.நாகையா அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் துரைசிங்கம், இராசம்மா, கனகம்மா, சுப்பிரமணியம் மற்றும் பூமணி எனும் உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகள் கங்கா லஷ்மி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து உலகநாதன்,ஸ் ரீதரநாதன், கோகிலா, வரதீஸ்வரன், கேதீஸ்வரன், சசிகலா, நகுலேஸ்வரன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவகலா, இசைவாணி,ஸ் ரீஸ்கந்தராஜா, விஜி, அம்பிகைபாகன், றஞ்சா என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து நிமலன்-மதுரிகா, யாமினி-சஜீவ், டனா, டனீ, டானு, ராகுலன், றிஷான், ஓவியா, அருண், அகிலன், அருளினி, கவின், சுதன், பவன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 22.07.2019 இல் 89 வயதில் கனடாவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

தங்கச் சிரிப்பே தலைமைக் குணமே
எங்கும் நிற்கும் இனிமை உறவே
அங்கம் வலிக்க உழைத்த உயிரே
அன்பு நிறைந்த அழகு உள்ளமே
என்தன் உயிராய் வாழ்ந்து
எங்கே பிரிந்து போனீர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.