மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேந்திரம் பாலசுப்பிரமணியம்
வயது 673 நவம்பர், 1951 – 12 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று கல்வியாங்காட்டில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தனகுணபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(மேகவர்ணன்), நந்ததாஸ்(டிலாணி), கலாஞ்சென்ற நளாயினி, நிர்மலதாஸ்(சினோஜா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானபாஸ்கரன்(நாகேஸ்வரி), ஜெயகுலராஜா(றஞ்சனதேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தரராஜா(பிரபறுடா), வரதராஜன்(பாக்கியலக்சுமி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபர்ணன், லவர்ணன், கிருஷ்மா, சமீரா, நளின், றியான், ஏடன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும், படித்த மக்கள் நிறைந்து உள்ளதும், மிளகாய்தோட்டம், மரக்கறி தோட்டம் பயன்தரு மரங்கள் என செழிப்பு மிகு கல்வியங்காட்டில் 03-11-1951 இல் நாகேந்திரம், சின்னம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் பாலசுப்பிரமணியம் அவர்கள் ஞானபாஸ்கரன், ஜெயகுலராஜா ஆகிய உடன் பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் தம்பிராசா, தனகுணபதி தம்பதிகளின் அழகுப் பெண்ணான வசந்தமலர் அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து நந்தினி, நந்ததாஸ், நளாயினி, நிர்மலதாஸ் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
பாலா என அனைவராலும் அழைக்கப்படும் இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12-04-2019 இல் 67 வயதில் கனடாவில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"புன்னகை முகமே
பூவிழிப் பார்வையே
புன் சிரிப்பே
கனிவுப் பேச்சே
கருனை மனமே
காவல் தெய்வமே
கதறி அழுகிறோம்
கனிவான ஆத்மாவே "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

