2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் செல்லையா
நாகலிங்கம் போசனசாலை உரிமையாளர்- யாழ்ப்பாணம்
வயது 7622 ஜூலை, 1942 – 29 மார்ச், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- இந்தியா, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் செல்லையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டாண்டு கடந்ததென்று
இனியவர்கள் வந்து சொன்னாலும்,
நம்ப மறுக்கின்றது அப்பா
எங்கள் உள்ளம் உங்கள் பிரிவை.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வரப்போவதில்லை என்பது
நம் மனதில் நிலையாய் நின்றாலும் அப்பா உங்கள்
நினைவுகளை எம்மால் மறக்கமுடியவில்லை.
உறவுகளை இவ்வுலகில் விட்டுவிட்டு நீங்கள்
சொர்க்கத்தில் அமர்ந்துவிட்டீர்கள் அப்பா.
வருடங்கள் உருண்டாலும் வலியின் வாசம் மட்டும்
விழிக்கருகில் வடுப்போல விலகாமல்
என்றென்றும் இருக்கும் அப்பா எம் இதயங்களில்.
ஒவ்வொரு நொடிப்பொழுதும் மறையா உருவத்தோடு
புன்னகைத்து வலம் வருகின்றீர்கள் அப்பா.
காலங்கள் கைகொடுத்து விடைபெற்றாலும்,
கணப்பொழுதில் காலனவன் கவர்ந்து சென்ற
உங்கள் ஆத்ம நினைவுகள் எம் நெஞ்சினில்
நிழலாய்த் தொடரும் அப்பா.
உங்களைப் பிரிந்து ஈராண்டு ஆனபோதும்
உங்களை மறவா நினைவுகளுடன்,
ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் தவிக்கும்,
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

