மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நகுலேஸ்வரி தியாகராசா
வயது 8119 ஜூலை, 1937 – 7 ஜூன், 2019
- பிறந்த இடம்
- நாரந்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி தியாகராசா அவர்கள் 07-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா(பெரியதம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை, சிவபாக்கியம், குலநாயகம் மற்றும் தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தியாகேஸ்வரி(இலங்கை), விஜயகுமார்(கனடா), ஜெயக்குமார்(இலங்கை), சிவானந்தகுமார்(சுவிஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), வசந்தகுமார்(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மவதி, காலஞ்சென்றவர்களான சிவராசா, நாகராசா மற்றும் புனிதவதி, காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் கமலாதேவி, தணிகாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கைலாயநாதன், சாந்தினி(கனடா), கலைவாணி(இலங்கை), ரூபவதி(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்), துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
சகோதரர், சகோதரி பிள்ளைகளின் பெரியதாயாரும் சிறிய தாயாரும்,
மைத்துனர் மற்றும் மைத்துனிமார் பிள்ளைகளின் மாமியாரும்,
யதுகுலன், தர்சிகன், லக்சிகன், விதுசா, நிரோசன், கம்சலா, கல்பனா, டிசாயினி, ஜெயசீலன், கேசினி, அபித், அபிசேக், பிரணவன், அபர்னா, எழில்வேந்தன், கோபிநாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிசனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-06-2019 சனிக்கிழமை, 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் சிவன் வீதி, யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-06-2019 திங்கட்கிழமை அன்று நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை இல்லத்தில் மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் நாரந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள நான்கு பக்கமும் கடலலை தாலாட்டும் அழகிய வளம் நிறைந்த தீவாக அமையப் பெற்ற ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கில் திரு.திருமதி கார்த்திகேசு சிவக்கொழுந்து தம்பதிகளுக்கு அன்புப் புத்திரியாக நகுலேஸ்வரி அவர்கள் 19/JUL/1937 ஆம் ஆண்டில் இராஜதுரை, சிவபாக்கியம், குலநாயகம், தயாநிதி போன்றவர்களின் உடன் பிறப்பாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் திரு. திருமதி. சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான திரு. தியாகராசா அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தியாகேஸ்வரி, விஜயகுமார், ஜெயக்குமார், சிவானந்தகுமார், யோகேஸ்வரி, வசந்தகுமார், உதயகுமார் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து உயர்நிலை அடைந்ததும் கைலாயநாதன், சாந்தினி, கலைவாணி, ரூபவதி, மனோகரன், துஷ்யந்தி போன்றவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் மாணிக்கபிள்ளையாரின் மீது அதிக பக்தி கொண்டவராகவும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 07.06.2019 இல் 81 வயதில் வண்ணார்பண்ணையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"நாரந்தனையில் உதிர்த்த
......நல் உள்ளமே
நன்றி மறவா
.......அன்பு உறவே
நாளைய வாழ்வின்
......விடி வெள்ளியே
நாங்கள் கலங்க
......நீங்கள் போனீரே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

