அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லம்மா சேனாதிராசா
வயது 935 மே, 1925 – 8 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவாழ்க்கை வரலாறு
நல்லா பல துறைகளிலும் தேர்ச்சி பெற்று முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் எமது சமூகத்திற்கு ஆழ்ந்த அன்புடனும், அர்ப்பணிப்புடனும் சேவையாற்றினார். அவர் இலங்கையில் இராமநாதன் கல்லூரியில் ஆசிரிய பயிற்சி படிப்பை முடித்துக்கொண்டு, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் ஆங்கில மாணவியாகவும், பின்பு ஆசிரியராகவும் பணியாற்றினார்.அதன் பின்பு இந்தியாவில் சென்னையில் Queen Mary's college ல் தனது BA மற்றும் MA பட்டங்களை பெற்றுக்கொண்டார். 1952 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை அவர் இலங்கையில் கொழும்பிலும் Visaka Vidyalaya பின்பு கண்டியிலும் Trinity college ஆசிரியராக பணியாற்றின
நல்லா (PHD in Geography, Fulbright and AAUW at Ohio State University) புலமைப்பரிசில் பெற்று இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்காக வந்த முதல் தமிழ்ப்பெண்மணி ஆவார்.
அவர் 1958 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பின்பு இங்கிலாந்தில் பல்கலைக்கழக ஆசிரியராக பதவியேற்றார். அதன் பின்பு 1966 ஆம் ஆண்டில் Toronto கனடாவிற்கு தனது இளம் குடும்பத்துடன் புலம் பெயர்ந்து வந்தார். அவர் Toronto, Ontario வில் பல துறைகளிலும் பணி புரிந்துள்ளார்.
அவர் கல்வி ஆராய்ச்சியாளராக (educational Reseacher) OISE லும், சமூக சேவையாளர், நகர்ப்புற திட்டமிடல், மற்றும் பொதுசனக் கொள்கைகளிலும் Toronto மற்றும் Ontario அரசாங்க நிறுவனங்கள், மற்றும் அவரது சொந்த நிறுவனங்களிலும் சேவையாற்றியுள்ளார்.
முழுக் கதையையும் வாசிக்க
நல்லாவின் சேவை பல மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தது.மேலும் அவர் பல கலாச்சார அமைப்புக்களிலும் தொண்டாற்றினார். அவர் தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் சிறந்த பேச்சு திறன் பெற்றவராக திகழ்ந்தார். Toronto வின் வேதாந்த சங்கம், இராமநாதன் கல்லூரி பழைய மாணவர் சங்கம்,யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் பாரதி கலா மன்றம் ஆகியோரின் நிறுவன உறுப்பினராக இருந்தார். மேலும் அவர் சத்திய சாயி பாபாவின் பக்தராக இருந்தார்.
அவர் 40 (from 1966 to 2006) வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி இளைப்பாறினார். அவர் தனது கணவர் சேனாதிராசா, மகள் யாழினி, மகன் மகிழ்நன் ஆகியோரையும், சகோதரிகளான நாகேஷ்வரி நடராசா, விசாலாட்சி பாலசுப்பிரமணியம்,மற்றும் பல நண்பர்களின் அன்பான குடும்பங்களையும் தவிக்க விட்டுச்சென்றுள்ளார். அவரது கடைசிக் காலங்களில், அவரைப் பராமரித்த Cummer Lodge பணிப்பாளர்களுக்கும், மற்றும் பிரத்தியேக கவனிப்பாளர்களாக இருந்த Magdalena, Jothy ஆகியோருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.
