மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லம்மா கணபதிப்பிள்ளை
வயது 881 நவம்பர், 1930 – 19 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்நதார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி தம்பாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,
கணபதிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
குமாரவேல்(கனடா), குகதாஸ்(பிரான்ஸ்), குணேஸ்வரி(கனடா), யோகதாஸ்(பிரான்ஸ்), கலைச்செல்வி(கனடா), கண்ணதாஸ்(கனடா), முரளிதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சறோயினிதேவி(கனடா), மேரி இவோன்(பிரான்ஸ்), தர்மகுலசூரியன்(கனடா), பத்மாவதி(பிரான்ஸ்), ஸ்ரீதர்(கனடா), சாந்தினி(கனடா), கலைமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மனோன்மணி, பகவதி, காலஞ்சென்றவர்களான நடராஜா, சாம்பசிவம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாஹீசன், Dr. Anitha, சிந்தியா, தாட்ஷாயினி, வெங்கடேஷ், மிதுலா, வியாஷர், சுபாங்கி, ராகவி, துவாரகன், சாய்ஹரன், சாய்ஷரன், கிற்ஸ்ரி, Dr. Inderjit, றியாம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Jasmin, Hanna, Mila, Ajayan, Suriya ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான, யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள தீவும் மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான வேலணையில் 01/Nov/1930 இல் திரு.திருமதி கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் அருமை மகளாய் நல்லம்மா அவர்கள் மனோன்மணி, பகவதி, நடராஜா, சாம்பசிவம், கமலாதேவி எனும் உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி தம்பாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் திரு.கணபதிப்பிள்ளை என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக குமாரவேல், குகதாஸ், குணேஸ்வரி, யோகதாஸ், கலைச்செல்வி, கண்ணதாஸ்,முரளிதாஸ் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து சறோயினிதேவி, மேரிஇவோன், தர்மகுலசூரியன், பத்மாவதி, ஸ்ரீதர், சாந்தினி, கலைமதி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து வாஹீசன், Dr.anitha, சிந்தியா, தாட்ஷாயினி, வெங்கடேஷ், மிதுலா, வியாஷர், சுபாங்கி, ராகவி, துவாரகன், சாய்ஹரன், சாய்ஷரன், கிற்ஸ்ரி, Dr.Inderit,றியாம் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், Jasmin, Hanna, Mila, Ajayan, Suriya போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கொக்குவிலில் வாழ்ந்த இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 19.08.2019 இல் 88 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
வேலணை மண்ணின் வெள்ளை மனதே
பால் போன்ற இனிமை உள்ளமே
கால் நடையாய் எம்மை வளர்த்தாயே
காலணின் பிடியால் கலங்கி அழுகிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

