மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி குமாரசாமி
முன்னாள் Chairman- கூட்டுறவுச்சங்கம், சமாதான நீதவான்
வயது 7818 பிப்ரவரி, 1939 – 31 மார்ச், 2017
- பிறந்த இடம்
- குமுழமுனை
- வாழ்ந்த இடம்
- உக்குளாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு குமுளமுனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி குமாரசாமி அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. தாமரைச்செல்வி(பிரித்தானியா), ஜெயசீலன்(அவுஸ்திரேலியா), முரளீதரன்(Assistant Director Mullaitivu), வில்வநாதன்(வில்வன்– சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருணாசலம்(முன்னாள் GSO- குமுளமுனை), இராமலிங்கம், திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுந்தராம்பாள், சரஸ்வதி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கர், கலைவாணி, இராஜேஸ்வரி, ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்வா, ராகவி, திவாகர், சங்கவி, அர்ச்சயன், வைஷ்ணவி, விசாலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 211,
சிவன்கோவில் வீதி,
உக்குளாங்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

