மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி நல்லையா
இளைப்பாறிய லிகிதர் மாவட்டச் செயலகம் - யாழ்ப்பாணம்
வயது 851 ஜூன், 1933 – 26 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கந்தரோடை, New Malden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி இமையாணன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி நல்லையா அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், கந்தரோடையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னம்மா, கந்தசாமி, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, லோகேஸ்வரி, லோகேஸ்வரன், தவமலர், வைத்தீஸ்வரன், மகேந்திரராஜா, காலஞ்சென்றவர்களான மகாதேவா, சிவன்செயல், விக்கினராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாளபதி, தயாநந்தன், தயாளினி, தயாநிதி, தயாபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருவருட்செல்வி, நிர்மலா, ரகுநாதன், முருகதாஸ், சிவதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷினி, திவாரகா, மேனுகா, கெளசிகா, சிற்சபேசன், ஜிசாந்தன், லக்சயன், ஷோவேதன், அனுசன், குணாளன், ஷாருதி, சன்ஜேஸ், சன்ஜிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், அதிக கற்பகதருக்கள்(பனை) நெல்வயல்கள் புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த உடுப்பிட்டி இமையாணன் வடக்கில் 01-06-1933 இல் நல்லதம்பி குஞ்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு கனிஸ்ட புதல்வனாய் நல்லையா அவர்கள் செல்லம்மா, அன்னம்மா, கந்தசாமி, நல்லம்மா ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் கந்தரோடையைச் சேர்ந்த செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் அழகுப் பெண்ணான பவளராணி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக தயாளபதி,தயாநந்தன்,தயாளினி,தயாநிதி,தயாபரன் போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் லிகிதராக கடமையாற்றியதுடன் ஓய்வு நிலையும் அடைந்தார்,மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 26.04.2019 இல் 85 வயதில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள New malden நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
உடுப்பிட்டி தந்த
......உத்தம வீரனே
உயர்ந்த உள்ளமே
......உலக நாயகனே
உறக்கம் துறந்து
.....உழைத்த மனிதனே
உங்கள் நினைவாய்
.....உருகிய மெழுகானோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

