மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி விசுவநாதபிள்ளை
முன்னாள் ராணி ஸ்ரோர்ஸ் உரிமையாளர், ஆத்மஜோதி தமிழர் இணைய ஸ்தாபகர்களில் ஒருவரும் அதன் தலைவரும்- மொன்றியல்
வயது 9124 அக்டோபர், 1927 – 30 மே, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Toronto, Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி விசுவநாதபிள்ளை அவர்கள் 30-05-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னபூரணம்(ஆத்மஜோதி அம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மீனாட்சிப்பிள்ளை கைலாசபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா(மேலதிக மாவட்ட பதிவாளர்-இலங்கை), புஸ்பராணி(மொன்றியல்), விமலேஸ்வரன்(ஓய்வு பெற்ற உதவி சட்டவரைஞர்– இலங்கை), மனோகரன்(சத்திரசிகிச்சை நிபுணர்– அவுஸ்ரேலியா), குணசேகரன்(ரொறன்றோ– கனடா), யோகேந்திரன்(முன்னாள் பொறியியலாளர் தொலைதொடர்புத் திணைக்களம்- இலங்கை), கமலராணி(ரொறன்ரோ), செல்வராணி(ஜேர்மனி), யோகராணி(ரொறன்ரோ), நாகநாதன்(மொன்றியல்), இராமச்சந்திரன்(தரவு ஆய்வாளர், ஒன்ராறியோ மாகாண அரசு– ரொறன்ரோ), சிவநேசன்(மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரேமராணி(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன்(மொன்றியல்), இந்திராணி(ஓய்வு பெற்ற ஆசிரியர்– கொழும்பு), தர்மாவதி(மருத்துவர்– அவுஸ்ரேலியா), சந்திரவதனா(கனடா), பிறேமாவதி(இலங்கை), இராமநாதன்(C.S.K– ரொறன்ரோ), இலங்கேந்திரன்(ஜேர்மனி), வாசுதேவன்(ரொறன்ரோ), காஞ்சனா(மொன்றியல்), சுஜித்தா(ரொறன்ரோ), அம்பிகை(மொன்றியல்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகிலன், றம்மிகா, தனுஜன், சயந்தன், சியானி, ஸ்ரிபன், இளநகை, ஆதித்தன், சுதாகரன், சங்கீதா, கோபிதருண், அனுசியா, பிரதீபன், பிரசாந்தன், பிரவீன், சுஜித்தா, தினேஸ்குமார், ரமேஸ்குமார், தர்சனா, கீர்த்தனா, சிந்துஜன், விதுசா, சுகந், சாயினி, மாதுரி, மாதங்கி, அஸ்வின், கவீனா, ஹம்சத்வனி, ஜர்சன், ஹம்சிக்கா, ஜர்சிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கனிஷ்கா, ஷோபிதா, லோகன், ஜாக்ஸ், மாயா ஜஸ்மின், செலீனா ரோஸ், லியாம், கிரிசானா, அனுக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும், பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடமும், வளமிகு நிலமும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த திருநெல்வேலி கிழக்கில் 24/Oct/1927 ஆம் ஆண்டில் நல்லதம்பி இராசம்மா தம்பதிகளுக்கு அன்பு மகனாக விசுவநாதபிள்ளை அவர்கள் மீனாட்சிப்பிள்ளை கைலாசபிள்ளை எனும் அன்பு உடன் பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகள் அன்னபூரணம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து சிறிஸ்கந்தராஜா, புஸ்பராணி, விமலேஸ்வரன், மனோகரன், குணசேகரன், யோகேந்திரன், கமலராணி, செல்வராணி, யோகராணி, நாகநாதன், இராமச்சந்திரன், சிவநேசன் போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, பெரியவர்களானதும் திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்பாகச் செய்து பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் அன்பாக பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வேலாயுதபிள்ளை என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் ராணி ஸ்ரோர்ஸ் உரிமையாளரும், மொன்றியல் ஆத்மஜோதி தமிழர் இணைய ஸ்தாபகர்களில் ஒருவாக விளங்கியதுடன் தலைவராகவும் அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டு உழைத்த உத்தம மனிதராக வாழ்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன், பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 30.05.2019 இல் 91 வயதில் கனடா ரொரன்ரோவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
திருநெல்வேலி தந்த
......குலக் கொழுந்தே
கருமுகில் போல்
.......ஊருக்கு உதவி
பெருமான் ஆகி
........பெயர் நாட்டி
குளிர் பனி போல்
......மறைந்தீரே எமை விட்டு
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

