மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லையா கண்ணதாசன்
ஆசிரியர் கிளி/ இராமகிருஸ்ணா வித்தியாலயம்
வயது 518 ஏப்ரல், 1965 – 25 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கண்ணதாசன் அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா நாகேஸ்வரி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகநாதன் லீலாவதி(வேலணை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமா(ஆசிரியை- யாழ். கல்வியங்காடு இந்து தமிழ்க்கலவன் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
வைஸ்ணவி அவர்களின் அன்புத் தந்தையும்,
வரதலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற மனோன்மணி, பாலசுப்ரமணியம்(கனடா), இரத்தினம்(மன்னார்), விக்னேஸ்வரன்(கனடா), மாலினி(ஆசிரியை- இலங்கை), சுந்தரமூர்த்தி(ஆசிரியர்- இலங்கை), திருநாவுக்கரசு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம், லலிதா(கனடா), ஜோசப்(அகில இலங்கை J.P), ஆனந்தி(கனடா), தனராஜ்(ஓய்வுபெற்ற அதிபர்- இலங்கை), பிருந்தா(நீதிமன்ற பதிவாளர்- இலங்கை), ராசினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 323,
நாவலர் வீதி,
இலுப்பையடிச்சந்தி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

