ஆறுதல்

மரண அறிவித்தல்

நமசிவாயம் பரராஜசேகரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நமசிவாயம் பரராஜசேகரம்

இளைப்பாறிய வரி மதிப்பீட்டாளர் - உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கணக்காளர் - D.M. Swaminathan Associates

வயது 762 மார்ச், 1943 – 29 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் பரராஜசேகரம் அவர்கள் 29-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் முத்துலட்சுமி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி இலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,

ஞானதேவி அவர்களின் கணவரும்,

துரைரட்ணம்(அவுஸ்திரேலியா), சத்யசோதி(கனடா) ஆகியோரின் சகோதரரும்,

சத்தியவாணி, சத்தியகாந்தன் ஆகியோரின் தந்தையும்,

சுதன், அபிராமி ஆகியோரின் மாமனாரும்,

அஸ்வின், அஜந், அபூர்வா, பிருத்வி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2019 வியாழக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும் நெல்வயல்கள்,வாழைத்தோட்டம்,புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்/உரும்பிராயில் 02-11-1943 இல் நவசிவாயம் முத்துலட்சுமி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் பரராஜசேகரம் அவர்கள் துரைரட்ணம், சத்யசோதி ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அன்பும் பண்பும் நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதும் விநாசித்தம்பி இலட்சுமி தம்பதிகளின் அழகு நிறைந்த ஞானதேவி அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும்,சந்தோசமாகவும் வாழ்ந்து சத்தியவாணி, சத்தியகாந்தன் போன்ற அழகுப் பிள்ளைகளை பெற்று வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நன்றாக படித்த இவர் உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரி மதிப்பீட்டாளராக சேவையாற்றியதுடன் ஓய்வு நிலை அடைந்தார்,D.M.Swaminathan Associates கணக்காளராகவும் வேலை செய்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.04.2019 இல் 76 வயதில் கொழும்பு நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

உரும்பிராய் மண்ணில்
......உதிர்த்த பூவே
அழகிய உருவமே
......அன்பு உள்ளமே
உங்கள் அறிவும்
.....அன்பு உள்ளமும்
அருமை உயிரும்
......அகிலம் துறந்ததேன்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.