நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நமசிவாயம் திருநாவுக்கரசு
வயது 7716 ஜூன், 1941 – 11 மே, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து உடனடியாக நேரில் வந்து ஆறுதல் தெரிவித்து இறுதி நிகழ்வுகளில் பங்கு கொண்ட நல்லுள்ளங்களுக்கும், பல்வேறு தேசங்களிலிருந்து தொலைபேசி, முகப்புத்தகம், மின்னஞ்சல் போன்றவற்றினூடாக அனுதாபத்தினை தெரிவித்த பாசமிகு உறவுகளுக்கும், பத்திரிகைகளில் கண்ணீர் அஞ்சலி தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டோர்க்கும், மலர் வளையங்கள் மாலைகளினூடாக அஞ்சலி செலுத்திய உறவுகளுக்கும் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவி புரிந்த அன்பான உறவுகள் யாவருக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த புங்குடுதீவு 05 ஆம் வட்டாரத்தில்16/JUN/1941 இல் நமசிவாயம் இராமாசிப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திருநாவுக்கரசு அவர்கள் காசிப்பிள்ளை, சிவகாமசுந்தரி, சரஸ்வதி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சண்முகபூபதி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சந்திரிகா, பகிரதன் ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன்,கோகிலதாசன், வதனி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்புற செய்ததுடன் சதுர்சன், நிகர்சன், அகர்சன், அக்சரன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தில் முக்கிய பொறுப்பாளர்களின் ஒருவராகத் திகழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.05.2019 இல் 77 வயதில் பிரான்ஸில் உள்ள Paris நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
புங்குடுதீவு மண்ணின்
......புது மலரே
புகழ் மணம் பரப்பிய
.......புதுத் தென்றலே
அன்பு உறவே
.....அழகிய புன்னகையே
ஆதவற்று தவிக்கவிட்டு
.......பிரிந்து சென்றீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

