மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவமணி வல்லிபுரம்
இளைப்பாறிய அதிபர்- தாதிகள் பயிற்சிக்கல்லூரி
வயது 8630 அக்டோபர், 1930 – 7 மார்ச், 2017
- பிறந்த இடம்
- Eluthumadduval
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நவமணி வல்லிபுரம் அவர்கள் 07-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, செல்லம்மா(எழுதுமட்டுவாள்) தம்பதிகளின் அன்பு மகளும், சிங்காரம் வள்ளியம்மை(வல்வெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம்(சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சனா(அவுஸ்திரேலியா), சத்தியேந்திரா(அவுஸ்திரேலியா), யமுனா(நோர்வே), காஞ்சனா(ஐக்கிய அமெரிக்கா), நிமலேந்திரா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற நளினா(ராஜி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணி(லண்டன்), மனோன்மணி(அவுஸ்திரேலியா), பொன்னம்பலம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரன், அனோஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வேதநாயகி, சிறீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற லக்சுமியம்மா, மகேஸ்வரி, நேசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அகல்யா, விரேன், அநிசா, டிரேன், நிக்கலஸ், ஜோஸ்வா, கமில் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 2:00 மணியிலிருந்து பி.ப 10:00 மணிவரையும், மற்றும் 09-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 2:30 மணிவரையும் A.F ரேமன் கொழும்பு பொரளை மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 09-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் A.F ரேமன் கொழும்பு பொரளை மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைப்பெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 05:00 மணியளவில் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

