மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினம் பரராஜசிங்கம்
ஓய்வு பெற்ற பதிவாளர் -யாழ்ப்பாணம் நீதிமன்றம்
வயது 8823 நவம்பர், 1930 – 29 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் பரராஜசிங்கம் அவர்கள் 29-07-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் நாகபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி(மழுவராயர்) மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நவரஞ்சன், ரஞ்சினி, காலஞ்சென்ற விஜயரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகலட்சுமி, ஜெயலிங்கம், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், இராசலட்சுமி, சுந்தரலிங்கம், சீதாலட்சுமி, விக்னேஸ்வரலிங்கம், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவகுமார், டயமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜ்குமார், நிருபா, தீபிகா, கார்த்திகா, மலர், விஜயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Shaylen, Shrevan ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய கோண்டாவிலில்23/NOV/1930 இல் திரு.திருமதி நவரத்தினம் நாகபூரணம் தம்பதிகளின் அன்பு மகனாக திரு.பரராஜசிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நாகலட்சுமி, ஜெயலிங்கம், தருமலிங்கம், இராசலட்சுமி, சுந்தரலிங்கம், சீதாலட்சுமி, விக்னேஸ்வரலிங்கம் மற்றும் செல்வமலர் எனும் உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி மழுவராயர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகள் ரஞ்சிதமலர் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நவரஞ்சன், ரஞ்சினி, விஜயரஞ்சன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்ந்து தேவகுமார் என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து ராஜ்குமார், நிருபா போன்ற பேரப்பிள்ளைகளுடனும், Shayien-Shrevan போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் யாழ்ப்பாண நீதிமன்ற பதிவாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது, நல்லுள்ளம் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.07.2019 இல் 88 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கோண்டாவில் மண்ணின்
குல விளக்கே
ஆண்டீர்கள் மண்ணில்
அறிவுடன் அஞ்சாது
பாண்டவர் போல்
பலரை நேசித்து
மாண்டீர் உலகில்
மனதினில் நிலைத்தீர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

