நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினம் நந்தன்
வயது 3924 ஜனவரி, 1980 – 4 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- முகாவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச் செய்திக்கேட்டு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும், தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுதாபச்செய்தி அனுப்பியவர்களுக்கும், பல வகையிலும் உதவிகளை புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
வடமாகாணத்தில் பனந்தோப்புகளும், தெங்குதோட்டங்களும், நறுங்கனிச் சோலைகள், வயல்வெளிகள், காய்கறித்தோட்டங்களும் நிறைந்த பச்சைப் பசேல் என காட்சி தரும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் முகாவிலில் 24/JAN/1980 இல் திரு.திருமதி நவரத்தினம் நேசராணி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.நந்தன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பாமினி, பிரதி போன்ற உடன்பிறப்புடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி நவரத்தினம் விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளான விஜயதர்சினி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கபிஸ் எனும் அழகிய பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கிய இவர் திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளை, உற்றார், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.09.2019 இல் 39 வயதில் கனடாவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
இனிமைப் பேச்சே
இதயக் கனியே
கனிவுக் குணமே
கருனை மனமே
இளமை வயதில்
இளந்தோம் உம்மை
இழகும் இருப்பாய்
மனங்கள் ஏங்கிறது.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

