மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணம் ரகுநாதன்
வயது 416 டிசம்பர், 1977 – 10 ஜூன், 2019
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் ரகுநாதன் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நவரட்ணம் பராசத்தி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கனகசபாபதி, வீராங்கனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அஸ்விதா, அஸ்வின், அட்சயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கதிர்காமநாதன்(டென்மார்க்), கோடீஸ்வரநாதன்(நெதர்லாந்து), மகேஸ்வரநாதன்(பிரான்ஸ்), ஜெயநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயறஞ்சினி, கவிதா, மோகனா, சயந்தினி, ஜெயதீஸ்வரி, காலஞ்சென்ற ரதீஸ்வரி, ஜெயகாந்தன், ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வினாயககுமார், சசிகுமார், ஈஸ்வரி, சுகன்யா ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஹரிஸ், ஜெனிஸ், அபிநயா, ஜாதவன், ஜனன், தருணீ, உமேஸ், டயானி, கிசோன், பகீன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய வயாவிளானில் 06/DEC/1977 இல் திரு.திருமதி நவரட்ணம் பராசத்தி தம்பதியர்களுக்கு கனிஷ்ட மகனாக திரு.ரகுநாதன் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கதிர்காமநாதன், கோடீஸ்வரநாதன், மகேஸ்வரநாதன், ஜெயநாதன் ஆகிய உடன் பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி கனகசபாபதி வீராங்கனி தம்பதிகளின் அன்பு மகள் குணேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து அஸ்விதா, அஸ்வின், அட்சயன் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கடின உழைப்பாளியும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.06.2019 இல் 41 வயதில் திருநெல்வேலியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
இளமை உருவே
......இன்ப முகமே
அழகுக் கண்ணே
.......அன்பு உள்ளமே
தெளிவு மனமே
.......தென்றல் குரலே
வளர்த்து வந்தீர் எமை
........வாடி அழுகிறோம் இன்று
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

