ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவரட்ணம் இராஜேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நவரட்ணம் இராஜேஸ்வரி

வயது 8323 மார்ச், 1937 – 17 ஜூலை, 2020

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கொக்குவில் மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் மேற்கு வராகி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் இராஜேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

செல்லத்துரையின் செல்ல மகளே
வீரசிங்கத்தின் வீர மருமகளே
நவரத்தினத்தை கவர்ந்த ரத்தினமே

ரஞ்சமலரை துளிர்விட்டு
மஞ்சுளாவை ஆதரவற்று
நவசேனைக்கும் பெறா மக்களுக்கும்
சொல்லாமல் போனது ஏன் ?

நான் வருவேன் - நான்வருவேன் என்று கூறினீர்களே
வாரும் அம்மா என்று சொல்லும் முன்- உங்கள்
குரல் ஓய்ந்தது எதற்காக ?

எதிர்பார்க்காமல் எல்லோருக்கும்
அள்ளிக் கொடுத்தீர்களே
எதிர்பார்த்த எம்மை ஏமாற்றி விட்டீர்களே
கண்ணுறங்கும் நேரத்தில் கனவாக வாரீர்களே
கண்திறக்கும் நேரத்தில் நனவாகி விடுகிறீர்கள்

பாசம் மிக்க அப்பம்மா
குறும்பு செய்யும்அம்மம்மா
குழந்தையாக மாறிய பூட்டியே
ஏன் நாங்கள் கதறியதை
நீங்கள் கேட்கவில்லை
நாங்கள் வாறோம் என சொல்லும் போது
நீங்கள் வராகி அழைக்கிறார் என சென்றுவிட்டீர்களே!

நாற்காலியும் உங்களைத் தேடுகிறது
எங்களை அரவணைக்கும் கைகளும்
குறைந்துவிட்டது
ஆற மறுக்கிற மனம் - உங்கள்
ஆருயிர் பார்க்கத் துடிக்கிறது

இப்பொழுது நீங்கள் மண்ணுலகை
விட்டு பிரிந்தாலும் எப்பொழுதும்
உங்கள் ஓய் எனக் குரல்
ஒலித்துக் கொண்டே இருக்கும்.

உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டிமார்கள்!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 17 ஜூலை, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 16 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.