மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணம் சாமுவேல் மகாரட்ணம்
Retired Markfed at Jaffna
வயது 7313 செப்டம்பர், 1945 – 17 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- Karampakam
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி இமையாணன் மேற்கு துவாளி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் சாமுவேல் மகாரட்ணம் அவர்கள் 17-09-2018 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், மகாலட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற இராஜரட்ணம், நேசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரட்ணபாக்கியதேவி(சுட்டி ரீச்சர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
மகாதேவி, ஜீவா, ரட்ணா, கிச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவா ரீச்சர், காலஞ்சென்ற சின்னா ரீச்சர், முத்துரட்ணானந்தன்(ஓய்வுநிலை பிரதிப்பொது முகாமையாளர் - CEB), தங்கா Miss ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நியோமி, நிரோஜன், நிரேஸ், ஜோயனா ஆகியோரின் பாசமிகு பெரியமாமாவும்,
மில்கா, கொட்வின் ஆகியோரின் ஆசை மாமாவும்,
தனுஜன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
டேமியன், ஷெகேன், ஆவினி, அகல்ஜன், அஸ்விகன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 19-09-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுப்பிட்டி தென்னிந்திய திருச்சபை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

