மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நீலாம்பிகை சந்திரசேகரம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- விபுலானந்தா வித்தியாலயம், கட்டைபறிச்சான் மூதூர்
வயது 8311 மார்ச், 1936 – 9 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- Kaddaiparichan, Mitcham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை 10ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கட்டைபறிச்சான், லண்டன் Mitcham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நீலாம்பிகை சந்திரசேகரம் அவர்கள் 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, தங்கநாச்சியார் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீசன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, மாசிலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயமணி(ஜெயா- லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காயத்திரி, பவித்திரா, ஆருரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் கிழக்கு பகுதியில் சிவ பூமியான பிரதேசமும், தமிழர் தலைநகரரும், மூவின மக்களும் வாழும் அழகு நிறைந்த இடமும் நெல்வயல், மரக்கறித்தோட்டம், பயன்தரு மரங்கள் என அழகு நிறைந்த திருகோணமலை 10ஆம் குறிச்சியில் அழகிய 11-03-1936 இல் ஏரம்பு முத்துப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக நீலாம்பிகை அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் கதிர்காமத்தம்பி, மாசிலாமணி போன்ற உடன் பிறப்புகளுடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து, பெரியவளானதும் கோபாலபிள்ளை தங்கநாச்சியார் தம்பதிகளின் அருமை மகனான சந்திரசேகரம் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து, ஜெகதீசன் எனும் ஒரே ஒரு அன்பு நிறைந்த அருமைப் பிள்ளையைப் பெற்று வளர்த்து பெரியவனானதும் ஜெயமணி என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து அதன் பலனாக கிடைத்த காயத்திரி, பவித்திரா, ஆருரன் போன்ற பேரப்பிள்ளைகளை மடியில் இருத்தி முத்தமிட்டு மகிழ்ந்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் பெறுமைசாலியாகவும் அறிவாளியாகவும் விளங்கினார் அதாவது மூதூர் கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு நிலை அடைந்ததுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவி செய்வதை தனது வாழ்வில் அங்கமாக கொண்டவர்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 09.04.2019 இல் 83 வயதில் பிரித்தானியாவில் உள்ள Mitcham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"உயிர் தந்த
உத்தம உறவே
உலகில் வாழ
உழைத்த மலையே
இரக்க குணமே
இனிமை மொழியே
இன்று எம்முடன் இல்லை
இரங்கி அழுகிறோம்""
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

