நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நியூட்டன் ராஜரத்தினம்
வயது 6721 மே, 1952 – 28 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நியூட்டன் ராஜரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த புலோலி தெற்கில் 21/MAY/1952 ஆம் ஆண்டில் திரு.திருமதி ராஜரத்தினம் பாக்கியம் தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.நியூட்டன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சித்ரதாசன், றெகானா, சுகுனா, வசந்ததாசன், கமலதாசன், பாரதிதாசன், விமலதாசன், ஜெனதா எனும் சகோதரர்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், அல்போன்சா எனும் அழகிய தேவதையைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக அர்ஜுன், ஸ்ரெபான் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து பெரியவர்களானதும், தாரணி அமிர்தராஜா என்பவரைத் திருமணம் முடித்து வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 28.12.2019 இல் 67 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
அன்புத் தந்தையே நல் லறிவின் உள்ளமே
பண்பில் சிறந்த பார் போற்றும் வீரனே
நின் நினைவோ நிழலாடும் உண்மைகள்
வன் சொற்கள் பேசிடா வாழ்ந்த உள்ளமே
எம் வாழ்க்கை சிறக்க நற் போதனை பொழிந்தவரே
உம் வாழ்வை முடித்து எமைவிட்டு எங்கே போனீர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

