ஆறுதல்

மரண அறிவித்தல்

நித்தியானந்தன் இந்திராவதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நித்தியானந்தன் இந்திராவதி

யாழ். இந்து மகளிர் கல்லூரி லிகிதர்

வயது 807 ஆகஸ்ட், 1937 – 22 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
கரம்பன்
வாழ்ந்த இடம்
இந்தியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஸ்ரான்லி வீதியை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் இந்திராவதி அவர்கள் 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று தனது 80வது வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை(பரியாரியார்) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நித்தியானந்தன்(யாழ். மாநகர சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

தமயந்தி(இந்தியா), பாமதி(சுவிஸ்), கிருசாந்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரிமள பாக்கியம், அம்பிகாவதி, சந்திரவதி, மற்றும் வித்தியாவதி(கொழும்பு), திலகவதி(கொழும்பு), பாலேந்திரன்(கொழும்பு), மகேந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரபாலன்(ஐக்கிய அமெரிக்கா), சுதர்சன்(சுவிஸ்), ராஜ்குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிந்தூரா, சுகஸ்திகா, சுகர்ஜன், சிந்திகா, அருண், யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 27-09-2017 பதன்கிழமை அன்று 08:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை இல, 105, எல்லை அம்மன் கோவில் றோட், Prag Nest Apartment அடையார் எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை T. Nagar Burial Ground(Near Bus Stand) எனும் முகவரியில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.