மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நித்தியராசா செந்தமிழ்ச்செல்வி
வயது 568 செப்டம்பர், 1963 – 11 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வேலணை கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியராசா செந்தமிழ்ச்செல்வி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார், காலஞ்சென்ற திருஞானசெல்வம், பத்மாவதி(ஓய்வு நிலை ஆசிரியை) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற அண்ணாமலை, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியராசா(ஓய்வு நிலை தபால் ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜனனி, பிரணவி, டதுசிகா(இராமநாதன் கல்லூரி), கபிலாஸ்(கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தமிழ் செல்வன்(பிரான்ஸ்), குமரகுரு(லண்டன்), உஷாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பார்த்தீபன்(லண்டன்), தர்சினி(லண்டன்), கலாவதி, பிறேமாவதி, சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டதுசன், கபிசன், சகினா ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
விதுரதர்ஷன், பரத், மிடுவரன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
வேலணை கிழக்கு பெருங்குளம் முத்துமாரி அம்மன் அமைந்திருக்கும் கிராமத்தில் திருஞான செல்வத்திற்கும் பத்மாவதிக்கும் மூத்த புதல்வியாக செந்தமிழ்ச் செல்வி 08.09.1963ம் ஆண்டு பிறந்தார்.
இவர் ஆரம்பக்கல்வியை மன்னார் மாவட்டம் பறப்பாக்கண்டல் கிராமத்தில் உள்ள றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையிலும் பின் மன்னார் அல்லசார் மகாவித்தியாலயத்திலும் பின்பு வேலணையில் உள்ள சரஸ்வதி மகாவித்தியாலயத்திலும் பின்னர் அவரது உயர் கல்வியை வேலணை மத்திய கல்லூரியிலும் கற்றார்.
முழுக் கதையையும் வாசிக்க
பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க கோப்பாயில் வசிக்கும் அண்ணாமலை இராசமணி தம்பதியினரின் புதல்வனான நித்தியராசா அவர்களை திருமணம் முடித்தார். இவர்களின் சிறப்பான வாழ்வில் மூன்று புதல்விகளாக ஜனனி, பிரணவி, டதுசிகாவையும் புதல்வனாக கபிலாலையும் பெற்றெடுத்தார்.
இவர்களுடன் சிறப்பாக வாழ்ந்து வரும் வேளையில் மூத்த புதல்வியான ஜனனியை 10.01.2010 அன்று காலன் கையில் பறிகொடுத்தார். இதன் தாக்கமாக மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு பலவீனம் அடைந்து சிறிது காலம் வாழ்ந்து வரும் வேளையில் திடீர் நோய்வாய்ப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். 4 மாதங்களுக்கு மேலாக வைத்தியர்களும் தாதிகளும் போராடி காப்பாற்ற முடியாமல் 11.09.2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

