90ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நிவேதன் அருந்தவராஜா
வயது 1925 ஜனவரி, 1991 – 10 ஜூலை, 2010
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜேர்மனி கிறீபில்ட் நகரைப் பிறப்பிடமாகவும், வதிப்பிடமாகவும் கொண்ட செல்வன் நிவேதன் அருந்தவராஜா அவர்களின் 90ம் நாள் நீங்கா நினைவுகள்.
அன்னார், புன்னாலைக்கட்டுவன் வடக்கை வசித்தவருமான அருந்தவராஜா குலேந்திரன் அவர்களதும் அளவெட்டி வடக்கு சுப்பனாவத்தையை சேர்ந்த அருந்தவராஜா ரோகினி அவர்களின் அன்பு மகனும்,
நிவாகினியின் பாசமிகு தம்பியும் ஆவார்.
எனதருமை தம்பியே நிவேதா - நீ
எங்கு சென்றனையோ?
உன் நினைவால் நித்தம் வாடுகின்றேன்
முத்தான தம்பியாய் எனக்கு
சொத்தாக வந்துதித்தவனே!
தம்பிக்கு தம்பியாயும் - அண்ணனுக்கு அண்ணனாயும்
நீ நின்று வழிகாட்டுவாய் என்றெண்ணி
துன்பமின்றி நான் இருந்தேனே – அத்தனையும்
ஓழிந்து போனதே ஒரு நொடியில்.
எத்தனை கனவுகள் என் நெஞ்சில் - அத்தனையும்
வெறும் காகிதக் கப்பல்களாய் நீந்துகின்றனவே
உயிரோடு நீ உலாவும் வேளையிலே
ஒன்றரை ஆண்டுகள் உன்னருகில் நானில்லை
உயிரற்று நீ தூங்கும் வேலையிலே – உனை
தொட்டழவும் முடியலயே தம்பி.
உன் மணக்கோலம் காணவில்லையே
பிணக்கோலமே காண வைத்தாய்!
அம்மா அப்பா எத்தனை கனவுகள்
சுமந்தனர் நெஞ்சினிலே – அத்தனையும்
இறக்கிட முடியாது தவிப்பது தெரியவில்லையா
அக்கா என்று நீ அழைத்த ஓசை
நித்தம் என் காதில் ஒலிக்குதடா
கனவிலும் நினைவிலும் உன் நினைவு
என்னை நிலை குலைய வைக்குதடா!
நீ பிரிந்து இன்று முன்நான்கு வாரங்கள் ஆனதே
அதற்குள் எத்தனை எத்தனை மாற்றங்கள் - ஆனால்
நீ மட்டும் எம் வீட்டில் நிழற்படம் ஆகிவிட்டாயே!
என் பாசத்தின் பொக்கிசமே என் தம்பி
காலம் உள்ள வரை உன் நினைவோடு வாழ்ந்திடுவேன்!
நித்தம் உன் பிரிவால் துடிக்கும் அக்கா நிவாகினி. அப்பா அம்மா
— அருந்தவராஜா குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

