10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பழனி புவனேஸ்வரி
வயது 6319 டிசம்பர், 1943 – 26 மே, 2007
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- நல்லூர், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த பழனி புவனேஸ்வரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், சின்னத்தம்பி குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பழனி(இளைப்பாறிய இ.போ.ச உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகதாஸ்(லோகன்), லோகேந்திரன்(இந்திரன்), லோகேஸ்வரன்(பபி), லோகநாதன்(ரவி), லோகச்சந்திரன்(றஞ்சன்), லோகறஞ்சன்(நிமால்), லோகேந்திரராணி(லோகா), லோகறஞ்சனி(றஞ்சி), லோஜினி(லோஜி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
பிள்ளைகளும், மருமக்களும், பேரப்பிள்ளைகளும், உறவுகளும்
தாங்கமுடியாத வேதனையில் சொல்வதற்கு
வார்த்தையும் இல்லாமல் தவிக்கின்றோம்!
மறக்க முடியாத சோகத்தை தந்து விட்டு எங்கு சென்றீர்கள்?
அம்மம்மா , அப்பம்மா எங்கு என்று
உங்கள் அன்புப் பேரப்பிள்ளைகள்
கேட்டால் என்ன பதிலைச் சொல்வோம்?
என்றென்றும் உங்கள் அழியா நினைவுகளுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— பிள்ளைகள்(பிரான்ஸ், லண்டன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

