நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பழனிவடிவேலு இராசம்மா
வயது 7913 ஜூலை, 1940 – 22 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கரணவாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கரணவாய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பழனிவடிவேலு இராசம்மா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
உறவென்ற விருட்சம் ஒன்று உறங்கியது கண்டோம் அம்மா!
பிரிவென்ற பெருந்துயரம் வாட்டுது எம் உள்ளத்தை!
துன்பம் வரும் வேளை எல்லாம் தூணாக நின்றீர்!
துவண்டு நாம் வீழாமல் காத்திருந்தீர்!
வாழ்வினில் எட்டாது வாழ வைத்த தெய்வமே!
வாடி மனம் தவிக்கின்றதே வாழ்ந்து நீங்கள் முடிந்ததனால்!
பாரினில் உமக்கென ஈடான உறவு நாம் பார்ப்பது இனி எப்போ?
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணம் கரவெட்டி கரணவாய் தெற்கில் 13/JUL/1940 இல் இராசம்மா அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும், வடிவேலு எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக, ஆணந்தகுமார், ஜெயக்குமார், சாந்தினி, கீதா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, ஜெயரானி, கோமதி, சிவராஜா, தீபன் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து, ஜீவிதா, ஜெனாத்தன், ஜெனுத்தன், கமலகுமார், கேராம், பவித்தா, பிரீத்தா, சுஜீவன், ரகுராம், ரகுபாலன், ரகுராஜ், ராகுலன், ராதிகா, தீபிகா, அனுஜன், கீர்த்திகா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 22.09.2019 இல் 79 வயதில் கரவெட்டி கரணவாய் தெற்கில் காலமானார்.
"எம் வாழ்வில் வெளிச்சம் ஏற்றிய தாயே
வெள்ளி நிலவாய் போனதுமேன்
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே தாயே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளிக்கூடத் துவழாமல் தூக்கிவிட்ட தாயே!
காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

