ஆறுதல்

மரண அறிவித்தல்

பண்டாரி சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பண்டாரி சோமசுந்தரம்

இளைப்பாறிய பொறியியலாளர்

வயது 8418 செப்டம்பர், 1934 – 15 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
கொழும்பு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டாரி சோமசுந்தரம் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம் திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. அன்பு(லண்டன்), அஞ்சலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பொன்னாபரணம் மற்றும் Dr. தில்லை நடராஜா(கனடா), பராசக்தி(இலங்கை), காலஞ்சென்ற சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதீஸ் சிவா, மயூரன் அண்ணாமலை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அண்ணாமலை(இலங்கை), Dr. தியாகராசா(லண்டன்), நடராசா(இலங்கை), காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவானந்தன்(லண்டன்), சிவராசா(லண்டன்), சிவஞானவதி(லண்டன்), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, தாமோதரம்பிள்ளை, Dr. சக்தி ஆனந்தவல்லி(கனடா), பாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீவிக்னேஸ்வரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜன், ஆரபி, நட்டாஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் புகழ் பூத்த சீமான் திரு.பண்டாரி அவர்தம் பாரியார் தங்கமுத்து அவர்களின் அருமைப் புத்திரனாக 18/SEP/1934 ஆம் ஆண்டில் திரு.சோமசுந்தரம் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் சகோதரங்களுடன் சேர்ந்து நன்கு படித்த இவர் திரு.திருமதி பேரம்பலம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகளான சிவயோகம் அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக Dr.அன்பு, அஞ்சலா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்ந்து சதீஸ் சிவா,மயூரன் அண்ணாமலை போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து அஜன், ஆரபி, நட்டாஜா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நன்கு படித்த இவர் பொறியியலாளராக சேவையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 15.08.2019 இல் 84 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

ஏற்றம் பல கண்ட எங்கள் உறவே
மாற்றம் விரும்பிய மனித உயிரே
காற்றில் மனக்கும் முல்லைப் பூவே
சேற்றில் மலர்ந்த செந்தாமரையே
சீற்றம் தவிர்த்து சிறப்பாக செயற்பட்டு
ஈற்றில் வீழ்ந்து இறைபதம் அடைந்தீரே

பிற அறிவித்தல்கள்

  1. 14 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.