நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பஞ்சாட்சரம் இராசம்மா
வயது 9512 ஏப்ரல், 1924 – 22 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- துணுக்காய், செக்கடிப்புலவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், துணுக்காய் ஆலங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா செக்கட்டிப்புலவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் இராசம்மா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்திக்கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக்கிரியைகள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்றது.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
பாக்கியம் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவர் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்ட ஒரு உன்னத ஆத்மா. யாழ்ப்பாணம் துன்னாலையில் 12/APR/1924 இல் கார்த்திகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளாக இராசம்மா அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் பஞ்சாட்சரம் என்பவரைத் திருமணம் முடித்து,இராசரத்தினம், நாகரத்தினம், செல்வராசா, நாகேஸ்வரி, பரமேஸ்வரி, மனோரஞ்சிதம் போன்ற அன்பு பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவரான இவர், சுவையான உணவுகள் செய்வதில் கைதேர்ந்தவராக விளங்கினார்.மேலும் வாழ்வில் தனக்கே உரித்தான புன்சிரிப்பு கொண்டு, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 22.09.2019 இல் 95 வயதில் காலமானார்.
"பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது
எந்த உருவத்தில் நுழைந்தது என்று
யாருக்கு தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன்
அவன் என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
இனி யாரையம்மா பார்ப்போம்
உங்களுக்கு நிகராய் யாருமே இல்லையம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

