ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

பரமலிங்கம் முருகேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமலிங்கம் முருகேசு

வயது 6830 அக்டோபர், 1938 – 20 டிசம்பர், 2006

பிறந்த இடம்
காரைநகர் தங்கோடை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் முருகேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓர் பத்து ஆண்டுகள்!
விழியோரம் வழியும் ஈரம்
இன்னமும் காயவில்லை!!
கன்னங்களில் காய்ந்த உப்பு
இப்போதும் கரிக்கின்றது!!!

கடவுள்
உனக்கு எல்லாச் செல்வத்தையும்
அதிகமாகவே கொடுத்திருந்தான்!
ஆனால் உன்னை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டான்!!

எங்கள் அறுவருக்கும் எமதன்னைக்கும்
தந்தையாய் தாயாய்
நண்பனாய் நல்லாசானாய்
தலைவனாய் சேவகனாய்
எல்லாமுமாய் இருந்தாய் நீ!
பின் எதுவும் இல்லாமல் போனாய்
உன் நினைவுகளை மட்டும்
எங்களுக்குள் நிறைத்து விட்டு!

வறண்ட நிலத்திலும் வாழும்
கற்பகதருக்கள் போல
எங்களை வளர்த்து விட்டு
உன் பேர் சொல்லும் பிள்ளைகளாய்
நிமிர்த்தி நிறுத்திவிட்டு,
எங்களை தனியே விட்டு விட்டு போய் விட்டாய்

எங்கள் காரை மண்ணில் மட்டும்
உப்பு அதிகம் இல்லை
நீ போட்ட சோற்றில்
நீ வளர்த்த வளர்ப்பில்
நீ காட்டிய உறவுகளில்
எல்லாத்திலுமே அதனை
அளவுக்கதிகமாகவே போட்டிருந்தாய்!

ஆதலினால் நன்றியுள்ள ஆறு ஜீவன்களாய்
நிமிர்ந்திருக்கின்றோம்!
அதற்கு மேல் அம்மா
இன்று எங்களுக்கு அப்பாவுமாய்!

பாணந்துறையும், தங்கோடையும்,
பண்டத்தரிப்பும்,
இப்போதும் உன் பெயர் சொல்லும்.

வேறு என்னப்பா உங்களுக்கு சொல்லுவது?
மறுபிறப்பு என்ற ஒன்று இருந்தால்
பேரப்பிள்ளைகளை கல்லாப் பெட்டியில்
உன் மடி மீது இருந்தி கன்டோஸ் சொக்கிலட்
களவாக நீ கொடுக்க வேண்டும்
அதை நாம் கண்டிக்க வேண்டும்!

உன் காரில் ஏற்றிக் கொண்டு
பொன்னாலைப்பாலத்தின்
அழகு நீ காட்டிவர வேண்டும்!
மணக்காடு அம்மன் கோவில் வீதியில்
அவர்களுடன் உலா வரவேண்டும்!

வயலில் அரிவு வெட்டும் சூடு அடித்தாலும்
காட்டிக்கொடுக்க வேண்டும்.
நாங்களும் அம்மாவும் அதனை பார்த்து
மகிழ்ந்திருக்க வேண்டும்!

உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.