மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமலிங்கம் முத்துலட்சுமி
வயது 7325 அக்டோபர், 1945 – 25 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- நயினாதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Langnau
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Langnau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் முத்துலட்சுமி அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பரமேஸ்வரி, உதயகுமாரன், விஜயகுமார், மோகனகுமார், சுமதீஸ்வரி, காண்டீபன், பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விசுவலிங்கம், செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான யோகநாதன், சரஸ்வதி மற்றும் கோபாலன், சிவசிதம்பரம், சண்முகநாதன், கமலேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவநாதன், புஸ்பகௌரி, நித்தியகலா, நவறஞ்சினி, நிர்மலன், விஜிதா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கிருஸ்ணபிள்ளை மற்றும் ரெத்தினசிங்கம், கனகரெத்தினம், புஸ்பராணி, பாலசுப்பிரமணியம், சர்வலோகசிந்தாமணி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சிதம்பரம், பரமசிவம் மற்றும் சரசுலட்சுமி. வசந்தாதேவி, றஜனி, இரத்தினசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தினேஷன்- தர்ஜினி, அபினயா- அரவிந், உஷாந்தன், அபிராமி, விதுர்ஷன்- லக்ஷிகா, நிதர்ஷன், வினுஷா, பைரவி, அரிஷானா, அரிகரன், அஸ்மிதா, அமீரா, அன்சிகா, குருத்திகா, கிருத்திக், காவியா, கபில் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆதித், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க நாகபூசணி அம்மன் அருள் பாலிக்கும் அழகு நிறைந்த நயினாதீவு 08 ஆம் வட்டாரத்தில் 25/OCT/1945 இல் திரு.திருமதி ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளான முத்துலட்சுமி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் விசுவலிங்கம், செல்லத்துரை, யோகநாதன், சரஸ்வதி, கோபாலன், சிவசிதம்பரம், சண்முகநாதன், கமலேஸ்வரி, ராஜேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அழகிய ஆண் அழகனான பரமலிங்கம் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் இனிமையான வாழ்வின் சொத்தாக பரமேஸ்வரி, உதயகுமாரன், விஜயகுமார், மோகனகுமார், சுமதீஸ்வரி, காண்டீபன், பார்த்தீபன் எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவநாதன், புஸ்பகௌரி, நித்தியகலா, நவறஞ்சினி, நிர்மலன், விஜிதா, சிந்துஜா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த தினேஷன்-தர்ஜினி, அபினயா-அரவிந், உஷாந்தன், அபிராமி, விதுர்ஷன்-லக்ஷிகா, நிதர்ஷன், வினுஷா, பைரவி, அரிஷானா, அரிகரன், அஸ்மிதா, அமீரா, அன்சிகா, குருத்திகா, கிருத்திக், காவியா, கபில் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், ஆதித், ஆதிரா எனும் அழகிய பூட்டப்பிள்ளையகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவரான இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
”அன்பிற்கு இலக்கணமாக
இருந்த எங்கள் அம்மாவே
ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு காட்ட யாரும் இல்லையம்மா
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் சென்றது ஏன்?
நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்து விட்டீர்கள்”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

