நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமாநந்தம் சுப்பிரமணியம்
வயது 678 மார்ச், 1952 – 19 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட பரமாநந்தம் சுப்பிரமணியம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ் . அளவெட்டியில் புகழ் பூத்த சீமான் திரு. சுப்பிரமணியம் அவர்தம் பாரியார் கனகம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 08/MAR/1952 ஆம் ஆண்டில் திரு.பரமாநந்தம் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் முருகானந்தம், சிவானந்தம், சத்தியானந்தம் மற்றும் நல்லம்மா, அருளானந்தம், சறோயினிதேவி போன்ற உடன் பிறப்புகளுடனும் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.திருமதி அப்பாபிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு நிறைந்த மகள் சரஸ்வதி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் நல் வாழ்க்கையின் பயனாக தர்ஷினி, நிலாஜினி, கமல், முரளிதரன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ரவிந்திரகுமார், பிரதீபன், சுறேமினி, ரமீனா என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து Juhesan, Migashini, Eniya, Bindhu, Sruthi, Pranish, Riya எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் அன்பும் பண்பும் கொண்டு நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,பழைய இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் அத்துடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார்,
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவினர், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 19.11.2019 இல் 67 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரத்தில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
அளவெட்டி தந்த அற்புத உள்ளமே
அன்புடன் பேசும் அறிவு மன்னனே
எமைக் கண்ணென காத்த உயிரே
உமைப் பிரிந்து வாட எங்கே போனீர்
ஆயிரம் உறவில் நீங்களே உயரம்
ஆராரோ வந்தாலும் உமைப் போல வருமா
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

