ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமு பரமநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமு பரமநாதன்

வயது 711 ஆகஸ்ட், 1947 – 24 ஜூன், 2019

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
Warendorf

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Warendorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமு பரமநாதன் அவர்கள் 24-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆபிரகாம் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,

தேவப்பிரியா, நிரோசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகசுந்தரம்(இலங்கை), சிவபாக்கியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜேந்திரன், கிறிஸ்ரோபர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜிவ், அஞ்சலி, லீயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் புகழ் பூத்த சீமான் திரு.இராமு அவர்தம் பாரியார் திருமதி சின்னப்பிள்ளை அவர்களின் அருமைப் புத்திரனாக 01/AUG/1947 ஆம் ஆண்டில் திரு.பரமநாதன் அவர்கள் கனகசுந்தரம், சிவபாக்கியம் எனும் அன்பு உடன்பிறப்புடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி ஆபிரகாம் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகள் றெஜினா அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக தேவப்பிரியா, நிரோசியா போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று கஜேந்திரன், கிறிஸ்ரோபர் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து கஜிவ், அஞ்சலி, லீயா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இமானுவேல் என்று அனைவராலும் பாசமாக அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 24.06.2019 இல் 71 வயதில் ஜேர்மனியில் உள்ள Warendorf நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"புன்னகை முகம் கொண்ட
......புது உயிரே
சின்ன இதயமதில்
......பெரிய உள்ளமே
கன்னக் குழிச் சிரிப்புடன்
.....காட்சி தருவாய்
அன்னமாய் அழகுற நடந்து
.....எண்ணமாய் கலைந்தீரே"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.