ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி குணரட்னராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி குணரட்னராஜா

ஓய்வு பெற்ற ஆசிரியை

வயது 816 செப்டம்பர், 1937 – 4 ஜூன், 2019

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
மானிப்பாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குணரட்னராஜா அவர்கள் 04-06-2019 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்னம்மா, கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவமணி தம்பிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்னராஜா(கல்வி திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகுணா, மேகலா, குகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உதயகுமார், விபுலன், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி, சரஸ்வதி, காசிப்பிள்ளை, யோகேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் கணேசநாதன், யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, மகாதேவன், குகதாசன், திருநாவுக்கரசர், தவமணி, ஆறுமுகம், நாகவேல் மற்றும் மனோரஞ்சிதம், பவளமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கார்த்திகன், சுருதி, கோகுலன், லதுஷான், தாகித்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த யாழ்ப்பாணத்தில் நெற்பயிர் செழித்து வளரும் மருதநிலம் அமையப் பெற்ற மானிப்பாய் எனும் இடத்தில் பல்வேறுபட்ட சைவக் கோவில்களைக் தன்னகத்தே கொண்டும், தமிழர் போராட்ட வரலாற்றில் மறக்க முடியா இடமான சுதுமலையில் திரு.திருமதி அன்னம்மா கந்தையா தம்பதிகளுக்கு அன்புப் புத்திரியாக பரமேஸ்வரி அவர்கள் 06/SEP/1937 ஆம் ஆண்டில் இராஜலட்சுமி, சரஸ்வதி, காசிப்பிள்ளை, யோகேஸ்வரி, மகேஸ்வரி, கணேசநாதன், யோகநாதன் போன்றவர்களின் உடன் பிறப்பாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அறிவும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து நன்கு படித்து உயர்நிலை அடைந்ததுடன் நவமணி தம்பிமுத்து தம்பதிகளின் அறிவு மகனான கல்வி திணைக்களத்தில் கடமையாற்றும் குணரட்னராஜா அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சுகுணா, மேகலா, குகன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து உயர்நிலை அடைந்ததும் உதயகுமார், விபுலன், தாட்சாயினி போன்றவர்களைத் திருமணம் முடித்து, கார்த்திகன், சுருதி, கோகுலன், லதுஷான், தாகித்தியா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியையாக கடமையாற்றி சமுதாயத்திற்கு பல நல் மாணவர்களை உருவாக்கி போற்றுதற்குரிய ஆசிரியையாகத் திகழ்ந்து ஓய்வு நிலை அடைந்ததுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 04.06.2019 இல் 81 வயதில் சுதுமலையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"சுதுமலை தந்த
......சுந்தரப் பெண்ணே
பதுமைக் குணமுடம்
.......படித்து உயர்ந்தீர்
எதுவரினும் அஞ்சாது
......எடுத்துரைத்து வாழ்ந்த
உயர் குருவே
......உமைப் பிரிந்தோமே"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.