1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி கணேசு
வயது 7921 பிப்ரவரி, 1940 – 9 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கணேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னை ஓர் ஆலயம் அதில்
அமர்ந்திருக்கும் தெய்வம் நீ!
பத்து மாதம் கருவறையில்
கலங்காமல் காத்தவள் நீ!
கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த எம்மை
கண்கண்ட தெய்வமாய் காத்தவள் நீ!
அம்மா என்றாலே அரவணைப்பு அன்பு
அன்பினிலக்கணம் நீயே எம் அன்னை!
கஸ்டங்கள், துன்பங்கள்! ஆம் எது வந்தபோதும்
கல்வி புகட்டி நற்சான்றோராய் நானிலம் மதிக்க
வெற்றியோடு போராடிய புண்ணியவதியே!
உன்புகழ் கூற வார்த்தைகள் ஏதம்மா!
என் புகழை நாவினிக்க நீ கூறினும் உன் புகழ்
கூறவார்த்தைகள் இல்லையம்மா அது தான் எங்கள் அம்மா!
உங்கள் பிரிவால் வாடும் அன்புப் பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்!!!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் கரணவாயில் 21/FEB/1940 இல் பரமேஸ்வரி அவர்கள் நடராசா சின்னத்தம்பி எனும் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் அறிவு நிறைந்த ஆண் மகனான இராசா கணேசு என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சந்திரமோகன், சூரியகாந்தன், உதயகுமாரன், பாபு, சுமதி, கௌரி, சாந்தி, மதனி, ஆனந்தகுமாரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து புஸ்பராணி, சாந்தி, நிசாந்தி, பாஸ்கரன், சிவநாதன், அன்பரசன், சதாநந்தன், மாலா, வசந்தி, வசந்தகுமார், ஜெயந்தி, லோஜினி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து சபாரட்ணம், அனிதா, ஆர்தர், சர்மிலன், தினுசா, சிந்தியா, சாருஜன், நிந்துஜா, பிரியந்தா, ஜெனிக்கா, அனுசா, தனுசன், பிரியா, அருண், பிரியங்கன், பிரியலிசா, லிபிசா, றொசாந், சச்சின், ஆரியன், கஜீவன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், அஞ்சலி, திரிசா, அர்ஜன் எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 09.07.2019 இல் 79 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கருணை முகமே
கலங்கா உள்ளமே
அருமை உறவே
அழகு நிலவே
பெருமைக் குணமற்று
வாழ்ந்த உயிரே
உரிமை உறவாகி
உலகைப் பிரிந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

