மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரம்சோதி கமலாதேவி
வயது 8731 அக்டோபர், 1931 – 11 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரம்சோதி கமலாதேவி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இலங்கநாதன் மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து வாத்தியார் தங்கரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரம்சோதி(இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார்(பிரித்தானியா), சசிதரகுமார்(கனடா), பிறேமகுமார்(கனடா), ஜெயகுமார்(அவுஸ்திரேலியா), சந்திரகுமார்(நோர்வே), பாலகுமார்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பாலசுந்தரம், சத்தியபாமா மற்றும் சரோஜாதேவி, மகேந்திரநாதன், வசந்தாதேவி, ராஜகோபால், இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவலோயினி, சுசிலா, யசோதா, சிவநுதா, சிவகாமி, ராஜி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
உஷாண், ஜெனிஷா, ஜெஷாந், நிருஷா, பிரஷா, ஜஷிக்கா, கபில், அருணன், அஞ்சனா, அபிரா, அஜித்தா, தாட்சாயினி, தாருண்னியா, தாரண்ணியா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அயுத்திரா, ஈத்தன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் கோண்டாவிலில் 31/OCT/1931 இல் திரு.திருமதி இலங்கநாதன் மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மகளான கமலாதேவி அவர்கள் பத்மநாதன், பாலசுந்தரம், சத்தியபாமா, சரோஜாதேவி, மகேந்திரநாதன், வசந்தாதேவி, ராஜகோபால், இராசமலர் போன்ற உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி தம்பிமுத்து வாத்தியார் தங்கரத்னம் தம்பதிகளின் அழகிய ஆண் அழகான பரம்சோதி (இலங்கை வங்கி) அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக உதயகுமார், சசிதரகுமார், பிறேமகுமார், ஜெயகுமார், சந்திரகுமார், பாலகுமார் எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவலோயினி, சுசிலா, யசோதா, சிவநுதா, சிவகாமி, ராஜி என்பவரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த உஷாண், ஜெனிஷா, ஜெஷாந், நிருஷா, பிரஷா, ஜஷிக்கா, கபில், அருணன், அஞ்சனா, அபிரா அஜித்தா, தாட்சாயினி, தாருண்னியா, தாரண்ணியா எனும் பூட்டப்பிள்ளைகளுடனும், அயுத்திரா, ஈத்தன் போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சுன்னாகத்திலும் வாழ்ந்த இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும்,அன்பு பாசம் நிறைந்து கானப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு வாழ்ந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 11.09.2019 இல் 87 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
கமல வதனமே கரிய விழியே
நிமலன் அடியை நித்தம் தொழுத
கருனை அருள் கொண்ட அன்னையே
அமரர் ஆனீரே அகிலம் போற்ற
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

