மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பராசக்தி பசுபதிப்பிள்ளை
வயது 9318 ஜனவரி, 1926 – 22 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- Wembley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை இலந்தவனம் சித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley யை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி பசுபதிப்பிள்ளை அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை(முன்னாள் காலி "லீலா ஸ்ரோர் " வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி(தேவி- லண்டன்), ஞானசௌந்தரி(ஞானம்- வேலணை சமாதான நீதவானும் இறப்பு, பிறப்பு, விவாகப் பதிவாளர், இலங்கை), இராஜேஸ்வரி(சில்லா- ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை), புவனேஸ்வரி(புவனா- லண்டன்), பஞ்சேஸ்வரி(லீலா- லண்டன்), உதயமூர்த்தி(உதயன்- ஜேர்மனி), உதயராணி(உஷா- லண்டன்), காலஞ்சென்ற மீனாம்பிகை(உமா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இலகம்மா, மயில்வாகனம், இரத்தினாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, சரோஜினி, கணேசபிள்ளை, சதாசிவம் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகநாதன்(லண்டன்), காலஞ்சென்ற சிவநாதன்(இலங்கை), ஞானரெட்டினம்(இலங்கை), பரம்சோதி(லண்டன்), கலைவாணி(ஜேர்மனி), கதிர்காமநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வராஜினி, தர்ஷினி, வாகிசன், ஆரூரன், தர்ஷன், நிறஞ்சன், யாழினி, தாரணி, பாமினி, மதுவந்தன், சாளினி, நிர்ஷினி, சாம்பவி, சாரங்கன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரவிந், ஜெசிக்கா, கார்த்திகா, கெளசிகா, பிருந்தா, சுகந்தன், ஜனார்த்தனன், பிரசன்னா, பிருந்தாஜினி, உமாசங்கர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தருணன், அரன், ராய், நைலா, காயா, மிரன், சஜிவன், இனிசா, கிரிஷனன், ஜஸ்கிதன், ஜருணன், சரன், ஜஷிகா, ஜருன், நிலா, அபி, கவினா, ஏகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
பராசக்தி பசுபதிப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறுஅம்மா 1926ம் ஆண்டு ஜனவரி 18ம் திகதி வேலணை இலந்தவனம் சித்தி விநாயகர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும் London Wembleyயை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி பராசக்தி பசுபதிப்பிள்ளை 22/09/2019 இறைவனடி சேர்ந்தார்.
அம்மா ஒரு நல்ல தாயாகவும், பெரியம்மாகவும், மாமியாகவும், தங்கையாகவும் ,மைத்துனியாகவும், பேத்தியாகவும், பூட்டியாகவும விளங்கிய இவர், தனது வாழ்நாள்முழுதும் இழந்தவன பிள்ளையாரை வணங்கி வந்தார்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

