மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரிமளாதேவி ரட்ணசிங்கம்
வயது 7020 டிசம்பர், 1948 – 6 ஜூன், 2019
- பிறந்த இடம்
- அல்வாய்
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை அல்வாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரிமளாதேவி ரட்ணசிங்கம் அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பையா(ஏறாவூர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி காசிதம்பி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா ரட்ணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணன், காந்தீபன், யமுனா, கமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காயத்ரி, சிக்ரிட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தவமணிதேவி, சிவசுப்ரமணியம், சிவநடராஜா, காலஞ்சென்ற கருணாதேவி, சீதாதேவி, சிவானந்தராஜா, சிவசெல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Gina, Ginu, Arthur ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs Parimaladevi Ratnasigham was born and lived in Alvai, Point Pedro, Denmark, passed away peacefully on Thursday 6th of June 2019.
She was the loving daughter of late Mr & Mrs. Eravur Thambiah and daughter in law of late Mr & Mrs. Kasithambi Kandaiya.
Loving Wife of Kandaiya Ratnasingham.
Loving Mother of Kannan, Gantheepan, Yamuna and Kamalan.
Loving Mother-in-law of Gayathri and Sigrid.
Loving Sister of late Thavamanidevi, Sivasubaramaniam, Sivanadarajah, late Karunadevi, Sithadevi, Sivanantharajah and Sivaselvarajah.
Loving grandmother of Gina, Ginu and Arthur.
This notice is provided for all family and friends.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், யாழ்ப்பாணத்தின் வடமராட்சி வடக்கில் வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அல்வாயில் 20/DEC/1948 இல் திரு திருமதி. ஏறாவூர் தம்பையா தம்பதிகளின் அன்பு மகளாக பரிமளாதேவி அவர்கள் தவமணிதேவி, சிவசுப்ரமணியம், சிவநடராஜா, கருணாதேவி, சீதாதேவி, சிவானந்தராஜா, சிவசெல்வராஜா எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் அறிவும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி காசிதம்பி கந்தையா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான கந்தையா ரட்ணசிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக கண்ணன், காந்தீபன், யமுனா, கமலன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்ததுடன் காயத்ரி, சிக்ரிட் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து Gina, Ginu, Arthur போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 06.06.2019 இல் 70 வயதில் டென்மார்க்கில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அல்வாய் மண்ணின்
.......அன்பு உள்ளமே
வல்லமை கொண்ட
.......வள்ளல் குணமே
வெள்ளை மனமே
....... வேங்குழல் இசையே
மெல்லப் பிரிந்து
.........துன்பம் தந்தீரே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

