ஆறுதல்

நன்றி நவிலல்

பரிமளம் குலசேகரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரிமளம் குலசேகரம்பிள்ளை

வயது 8716 ஆகஸ்ட், 1932 – 14 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம்
Sonderborg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

அனைவரிடத்திலும் பாசத்தையும், அன்பையும் நித்தமும் பொழிபவரான பரிமளம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

அன்பும் பாசமும் நிறைந்த தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் சண்டிலிபாயில் கந்தையா செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது மகளாக பரிமளம் அவர்கள் 16/08/1932ஆம் ஆண்டு பிறந்த இவர் கந்தரோடையை வாழ்விடமாகக் கொண்டு குணம், தேவராசா, சீவரத்தினம், நவரத்தினராசா, செல்வப்பிரகாசம், செல்வராணி மற்றும் சிவா போன்ற உடன்பிறப்புக்களுடன் பாசமாக பழகி வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

1951ஆம் ஆண்டு சின்னத்தம்பி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனான குலசேகரம்பிள்ளை என்பவரை மணமுடித்து இல்லற வாழ்வை சந்தோசமாக வாழ்ந்து வந்தார். பவளராணி, இந்திராணி, புஸ்பராணி, தேவராணி, விஜயராணி, பாமாதேவி, ரஞ்சன், ரஞ்சினி போன்ற அன்பு செல்வங்களப் பெற்று, நற்பண்புகளை போதித்து, அன்பாக வளர்த்தார். தனது அன்பு பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணைகளாக துரைசிங்கம், பத்மநாதன், காசிநாதன், கோபாலகிருஸ்ணன், புஸ்பராஜா, கமலாவதி, சுகந்தன் இவர்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் முடித்துவைத்தார்.

கணவரோடும், பிள்ளைகளோடும் சந்தோசமாக வாழ்ந்து வந்த இவருக்கு பேரடியாக வந்ததது அந்த நாள். 1980ஆம் வருடம் தனது கணவரை இழந்த இவர் தனது பிள்ளைகளுக்கு தாயாக மட்டுமல்ல தந்தையாகவும் மாறி அவர்களை வளர்த்து ஆளாக்கினார்.

2002ஆம் வருடம் தான் வாழ்ந்து வளர்ந்த நாட்டைவிட்டு தனது மகனுடன் Denmark-ற்கு குடிபெயர்ந்து வாழ்த்தொடங்கிய இவர் கடைசியாக 2004ஆம் ஆண்டு தனது மகள்களை காண இலங்கை சென்றார்.

எல்லோரிடமும் அன்பாக பழகி, பாசத்தை காட்டி, தனது மருகன்களிடம் ஒரு தாயாவே நடந்து, அனைவரிடத்திலும் மரியாதையாக பேசுபவரான இவர், தனது பேரப்பிள்ளைகளிடம் அதிக நேரத்தை செலவிட்டார்.

தன்னுடைய பிள்ளைகளும், மருமக்களும் ஒற்றுமையாக என்றும் இருக்க வேண்டும் என்பதையும், பேரப்பிள்ளைகள் நன்கு படித்து நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பதையும் தனது கடைசிகாலத்தில் அடிக்கடி சொல்லிவந்தார். தனது இறுதி நாட்களை மகனின் வீட்டிலேயே கழித்து வந்த இவர் 14.09.2019 அன்று தனது பாசத்திற்குரிய அனைவரையும் துக்கத்தில் மூழ்கவிட்டு மரணமடைந்தார்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 செப்டம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.