ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்னாந்து யுஸ்ரினம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பர்னாந்து யுஸ்ரினம்மா

வயது 8211 ஜூலை, 1937 – 14 ஜூலை, 2019

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
மண்டைதீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பர்னாந்து யுஸ்ரினம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்றுஉருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த எங்கள்
அன்புத் தெய்வமே!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!

மூன்று ஆண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த மண்டைதீவு 4 ஆம் வட்டாரத்தில் 11/JUL/1937 ஆம் ஆண்டு சாமிநாதர் அக்கினேசம்மா தம்பதிகளின் அன்பு மகளாக யுஸ்ரினம்மா இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் ஐயாத்துரை, அன்னப்பிள்ளை, றூபி, ஜெமிஸ், இராசகிளி போன்றவர்களின் சகோதரியாக குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் மனுவேல்பிள்ளை றோசலீனாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் மனுவேல்பிள்ளை பர்னாந்து என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பெரியவன், சின்னராசா, யோசெப் சீனி, யோகன், தொம்மை, செல்வதி, செல்வி, நெல்சன், செல்வந்தி, பத்திமாதேவி, நிக்சன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அருள்மணி, கில்டா, றெஜினா, விஜினி, றானி, மஞ்சு, யோன்சன், அன்ரன், சுலக்ஷனா, அல்போன்ஸ், பீற்றர், சுபா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும்,பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் யோசேப்பம்மா எனவும் அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.அத்துடன் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கியதுடன்.குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14.07.2019 இல் 82 வயதில் மண்டைதீவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

மண்டைதீவின் மஞ்சல் நிலவே
அண்டை மக்களுடன் அன்புடன் வாழ்ந்து
நின்று சேவை செய்து
நிம்மதி அடைந்து
எங்கும் புகழ் பரப்பி எம்முடன் வாழ்ந்து
எமை விட்டுப் பிரிந்தீரே

பிற அறிவித்தல்கள்

  1. 16 ஜூலை, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 13 ஆகஸ்ட், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.