ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னுச்சாமி பாஸ்கரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுச்சாமி பாஸ்கரன்

V.S.P நல்லெண்ணெய் உரிமையாளர், சமாதான நீதவான்

வயது 5817 செப்டம்பர், 1958 – 29 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
ஆனைக்கோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பாஸ்கரன் அவர்கள் 29-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி(முன்னாள் உரிமையாளர்- பரிமளா ஸ்ரோர்ஸ்) சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருமைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமத்திரா, சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரிமளாதேவி(ஜெர்மனி), பத்மாதேவி, பகவதிதேவி(லண்டன்), பற்குணதேவி(ஜெர்மனி), பத்மினிதேவி, உமாதேவி, பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகன், செந்தீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேவராஜா(ஜெர்மனி), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, ராமநாதன்(லண்டன்), சச்சிதானந்தன்(ஜெர்மனி), சுந்தரமூர்த்தி, குமாரதாஸ், பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீப், அயந்தன், செவ்வந்தி(தாய்லாந்து), செந்துரூபன், செந்தீசன், கெளசிகன், கெளதமன், கஜன், சர்மிதா, ரஜீவன், சஜிவன், ராகவி, சங்கீதன், மிதுலா, ஜெசிக்கா, பபிலன், ஹரிசனா ஆகியோரின் தாய் மாமனும்,

ஹரிஸ்கரன் அவர்களின் பாசமிகு பெரிய தந்தையும்,

ரசிமேனன், லக்சன், மதுஜன், பிரபஜன், லவித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்லுண்டாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சோமசுந்தரம் வீதி,
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.