ஆறுதல்

மரண அறிவித்தல்

பசுபதி சுந்தரலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பசுபதி சுந்தரலிங்கம்

Retired Superintendent of Tea estates

வயது 8921 ஆகஸ்ட், 1929 – 31 மே, 2019

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
Belfast

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்து Belfast ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி சுந்தரலிங்கம் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பசுபதி(சுதுமலை – வைத்தியர்) பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தபோநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தன்(கனடா), அனுஷியா(வட அயர்லாந்து), வத்சலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஷ்(அவுஸ்திரேலியா), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தங்கச்சியம்மா மற்றும் இந்திராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஞ்சய்(கனடா), பிரியங்கா(கனடா), Dr. ஆரூரன்- சாரா(வட அயர்லாந்து), வர்ணன்(அவுஸ்திரேலியா), இந்து(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஒஸ்கார் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அச்சுவேலியில் 21/Aug/1929 ஆம் ஆண்டில் பசுபதி செல்லம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக சுந்தரலிங்கம் அவர்கள் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தங்கச்சியம்மா, இந்திராணி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் வைத்தியர் பசுபதி பூமணி தம்பதிகளின் அன்பு மகள் தபோநிதி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து சயந்தன், அனுஷியா, வத்சலா எனும் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்ததுடன், சுரேஷ், நந்தினி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சஞ்சய், பிரியங்கா, Dr.ஆரூரன் சாரா, வர்ணன், இந்து போன்ற பேரப்பிள்ளைகளுடனும், ஒஸ்கார் எனும் பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் Retired superintendent of Tea estates ஆக வேலை பார்த்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 31.05.2019 இல் 89 வயதில் பிரித்தானியாவில் உள்ள வட அயர்லாந்து Belfast நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

”அச்சுவேலி மண்ணின்
........ அன்பு வதனமே
கண்ணாடி மனமே
.......கட்டழகனே
மனதில் பதிந்த
........மாலை உருவே
நின் நினைவில்
.....நிலைத்திடும் உறவுகள்”

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.